இந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் 3.5 மில்லியன் (35 லட்சம்) திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நடைபெற்ற 3.2 மில்லியன் திருமணங்களை விட அதிகமாகும். இந்த திருமணங்களுக்காக மட்டும் 4.25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படும் என அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.
ஆண்டின் முதல் பாதியில், ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை 4.2 மில்லியனுக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெற்றன. இதற்காக சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வை CAIT நடத்தி, அறிக்கை வெளியிட்டது.

இந்த ஆண்டு திருமணங்களுக்கான முஹூர்த்த நாட்கள் 60 இருந்த நிலையில், அடுத்த நிதியாண்டில் 49 நாட்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக, திருமணங்களின் எண்ணிக்கை குறையலாம் என மோதிலால் ஒஸ்வால் நிதி சேவைகள் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 10 (1 கோடி) மில்லியன் திருமணங்கள் நடைபெறுகின்றன.
திருமணங்களுக்காக செலவு செய்யும் முறையில் சில காலமாக புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றில் பல்வேறு உணவு வகைகள், சீர்வரிசை தட்டு செய்யும் கடைகள், வளையல் தயாரிக்கும் கடைகள் என பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கேட்டரிங் நிறுவனமான பர்பிள் பிளேட் கேட்டரிங் விருந்தினர்களின் மனநிலையை ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்ற பாஸ்தாக்களை பரிந்துரை செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போன்றவற்றை செய்வதனால் விருந்தினர்களை ஈர்க்க முடிகிறது. இதற்காக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று பர்பிள் பிளேட் கேட்டரிங் நிறுவனர் இஷான் கபூர் கூறினார்.
வெட்டிங் பிளானரான ஈவென்ட் காசா, ஒரு ஜோடியின் கதையை ட்ரோன்கள் மூலம் சொல்லும் ட்ரோன் ஷோவை ஏற்பாடு செய்துள்ளனர்.அதற்காக 400 ட்ரோன்கள், AI கருவிகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
இது போன்ற புது புது விஷயங்கள் திருமணங்களில் நடைபெறுவதால் திருமணத்தை சார்ந்த தொழில்கள் விரிவுபடுத்தப்பட்டு பெரிய அளவிலான வணிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 13 சதவீத வளர்ச்சி ஏற்படுகிறது.
முன்பு இருந்ததை விட தற்பொழுது நடக்கும் திருமண விழாக்களுக்கு கச்சேரி முதல் டான்ஸ் வரை பலவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அவற்றை சார்ந்த தொழிலும் விரிவடைந்தது தான்.


Click it and Unblock the Notifications