இந்திய விமானப் போக்குவரத்து துறையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது, இது விமான நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலாக இருந்தாலும், பயணிகளுக்கு பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது. இதில் முக்கியமாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு இந்திய விமான பயணிகள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்றால் மிகையில்லை.
இந்திய மக்களுக்கு விமானப் பயணம் வெளிப்படையானதாகவும், எளிதானதாகவும், சிரமமற்றதாகவும் மாற்றும் நோக்கில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு அசத்தியுள்ளது.

புதிய விதிகளின்படி, ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60% இருக்கைகள் அதாவது டிக்கெட்-கள் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இருக்கை தேர்வுக்காக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் குறித்து பயணிகள் மத்தியில் எழுந்திருந்த புகார்களுக்கு தீர்வாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் அனைத்து பயணிகளுக்கும் சமமான முன்னுரிமை கிடைக்கும் வகையில் "இலவச இருக்கை ஒதுக்கீடு" கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப பயணிகளுக்கு முக்கிய மாற்றம்
ஒரே PNR-ல் (ஒரே முன்பதிவு) பயணம் செய்பவர்கள், குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குழுக்கள், அருகருகே அமர்வதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நீண்டநாள் பயணிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது வருகிறது.
விதிகளில் வெளிப்படைத் தன்மை
விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகள் மற்றும் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்லும் விதிமுறைகளில் தெளிவான மற்றும் பயணிகளுக்கு ஏதுவான கொள்கைகளை விமான நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியபடி, இந்த சேவைகள் சீர்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தாமதம் மற்றும் ரத்து
விமான தாமதம், ரத்து அல்லது பயண அனுமதி மறுப்பு போன்ற சூழ்நிலைகளில், பயணிகள் விதிகளை கடுமையாக நிலைப்பாட்டு உடன் பின்பற்ற வேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது பயணிகளின் நம்பிக்கையை உயர்த்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இப்புதிய மாற்றங்கள், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விமானப் பயண சந்தையில் ஒரே மாதிரியான நடைமுறைகளை கொண்டு வரவும், புகார்களை குறைக்கவும், பயண அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications