ஆசியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, இந்தியாவில் அதிகரித்து வரும் விமானப் பயணிகளைப் பெரிய அளவில் கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் வேளையில், விலை போர்-ஐ உருவாக்கத் தயாராகி வருகிறது.
இந்த விலை போரில் ஒரு பக்கம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பது முக்கியமான நோக்கமாக இருந்தாலும், வருமானத்தையும் லாபத்தையும் இழக்கக் கூடாது என்பதிலும் இண்டிகோ உறுதியாக உள்ளது.
இதனால் விமானப் பயணிகளின் செக்-இன் பேகேஜ்-க்குத் தனிக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.
இண்டிகோ ஏர்லையன்ஸ்
இந்தியாவில் இண்டிகோ ஏர்லையன்ஸ் நிறுவனத்தை இயங்கி வரும் இண்டர்குளோப் ஏவியேஷன் லிமிட்டெட் தனது விமானக் கட்டணத்துடன் இருந்த செக்-இன் பேகேஜ் கட்டணத்தைத் தனியாகப் பிரிக்க முயற்சி செய்த போது தான் கொரோனா தொற்று ஏற்பட்டது.
மான கட்டண நிர்ணயம்
இதன் பின்பு கொரோனா காலத்தில் மத்திய அரசு விமானக் கட்டணத்தை நிர்ணயம் செய்து விமானப் போக்குவரத்தை மேம்படுத்தியது. இதனால் கட்டணத்தைத் தனியாகப் பிரிக்கவில்லை என இண்டர்குளோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரோனோஜாய் டட்டா தெரிவித்துள்ளது.
செக்-இன் பேகேஜ் கட்டணம்
இந்நிலையில் இண்டர்குளோப் ஏவியேஷன் தற்போது மத்திய அரசிடம் விமானக் கட்டணத்தில் இருந்து செக்-இன் பேகேஜ் கட்டணத்தைப் பிரிக்க அரசிடம் ஒப்பதல் பெற காத்திருக்கிறது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் செக்-இன் பேகேஜ் கட்டணத்தைத் தனியாகப் பிரித்து விமானக் கட்டணத்தில் அதிகப்படியான தள்ளுபடி அளிக்கத் திட்டமிட்டு வருகிறது.
கோ ஏர்லையன்ஸ்
இண்கோ நிறுவனத்தைப் போலவே கோ ஏர்லையன்ஸ் நிறுவனமும் விமானக் கட்டணத்தில் இருந்து செக்-இன் பேகேஜ் கட்டணத்தைத் தனியாகப் பிரிக்க அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால் அல்ட்ரா லோ காஸ்ட் விலையில் விமானச் சேவையை அளிக்க உள்ளது.
விலை போர்
கொரோனா தொற்றில் இருந்து இந்தியா வேகமாக மீண்டு வரும் நிலையில் போக்குவரத்துத் துறை பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் விலை போர் உருவாக்குவதன் மூலம் அதிகப்படியான விமானப் பயணிகள் ஈர்ப்பது மூலம் அதிக வருவாய் பெறலாம். இதனாலேயே இண்டிகோ பங்குகளை விற்று முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தைக் கைவிட்டது.


Click it and Unblock the Notifications