நாட்டில் சாமானிய மக்கள் அதிகம் ஆசைப்படும் விசயங்களில் ஒன்றாக இருப்பது விமானத்தில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என்பதுதான். ஆகாயத்தில் விமானம் பறக்கும்போது, வீட்டில் இருந்து கொண்டே வானத்தை நோக்கி பார்த்து மகிழ்ச்சியடையும் சிலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தியை ஏர்லைன்ஸ் நிறுவனமான இண்டிகோ ஒரு சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. அதாவது விமான டிக்கெட்டுகளை குறைந்த விலைக்கு ரயில் டிக்கெட்டுகள் விலையில் கொடுக்கப்போகிறது.
2024ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டைக் கொண்டாட மக்கள் பல வகையான திட்டங்களைச் செய்து கொண்டிருப்பர். பலர் வேறு ஊருக்கு அல்லது வேறு நாட்டிற்குச் சென்று புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் என்றால், உங்களை மகிழ்விக்கும் வகையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஒரு சிறப்புச் சலுகையை வழங்கியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, இண்டிகோ ஏர்லைன்ஸ் கெட்அவே சேல்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில் டிக்கெட் விலையில் விமான டிக்கெட் கிடைக்கும்: இண்டிகோ ஏர்லைன்ஸ் வழங்கும் கெட்அவே சேலில், ரூ.1199 முதல் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இது தவிர, சர்வதேச விமான டிக்கெட்டுகளை ரூ.4499 ஆரம்ப விலையில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இருப்பினும், இந்த விலையில் விமான நிலைய கட்டணங்கள் மற்றும் அரசாங்க வரிகள் சேர்க்கப்படவில்லை.
கெட்அவே சிறப்பு சலுகை: இண்டிகோ ஏர்லைன்ஸின் கெட்அவே விற்பனை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. இந்தச் சலுகையின் கீழ் நாளை கிருஸ்துமஸ் தினத்தன்று டிசம்பர் 25ஆம் தேதி வரை மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இதில், 23 ஜனவரி 2025 முதல் 30 ஏப்ரல் 2025 வரையிலான பயணத்திற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ஃபெட்ரல் வங்கி: ஃபெடரல் வங்கி வாடிக்கையாளர்கள் அதன் கிரெடிட் கார்டுகளில் கூடுதலாக, டிக்கெட் முன்பதிவில் 5000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இதற்காக, ஃபெட்ரல் வங்கியும், இண்டிகோவும் கூட்டு சேர்ந்துள்ளது. அதே நேரத்தில், பயணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 6E ஆட்-ஆன்களில் 15 சதவிகிதம் வரை தள்ளுபடியைப் பெறுவார்கள். மேலும் XL இருக்கையை வெறும் 599 ரூபாய்க்கு பெறலாம்.
வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31, 2024க்குள் முன்பதிவு செய்திருந்தால் உள்நாட்டு விமானங்களில் 15 சதவீதமும், சர்வதேச விமானங்களில் 10 சதவீதமும் பிளாட் தள்ளுபடியை அனுபவிக்க முடியும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், விமான முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் இண்டிகோ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications