குருகிராம்: இண்டிகோ என்றாலே பட்ஜெட் விலையில் மிக கம்மியான கட்டணத்தில் நாடு முழுவதும் சுற்றி வர அவ்வப்போது சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்குள் பயணம் செய்ய நான்கு நாள் சிறப்பு காதலர் தின சலுகையை அறிவித்துள்ளது.
இந்த சலுகையில் இந்தியா முழுவதிலும் பயணிக்க கட்டண விலையானது 999 ரூபாயில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
10 லட்சம் இருக்கைகள் மட்டும் சலுகை
இந்த நான்கு நாள் சலுகையில், மொத்தம் 10 லட்சம் இருக்கைகளை மட்டும் விற்கத் தீர்மானித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இண்டிகோ, இன்று முதல் இந்த சலுகை ஆரம்பித்துள்ளது. மேலும் பிப்ரவரி 14 வரை இந்த சலுகையை நீட்டித்துள்ளது. இண்டிகோ இந்த சலுகை மூலம் விற்பனை செய்யும் டிக்கெட்டுகளை வைத்து மார்ச் 1 முதல் செப்டம்பர் 30 வரையில் பயணிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
எங்கு- எவ்வளவு கட்டணம்?
குறிப்பாக டெல்லி - அஹமதாபாத் வரையிலான வழிதடத்திற்கு 1,699 ரூபாய் கட்டணமும், இதே டெல்லி - அமிர்தசரஸூக்கு 1,699 ரூபாயும், டெல்லி - பெங்களூருவிற்கு 2,799 ரூபாயும், இதே டெல்லி முதல் புவனேஸ்வருக்கு 2,999 ரூபாயும், டெல்லி - கோவாவிற்கு 3,999 ரூபாயும், டெல்லி - ஹைதராபாத்திற்கு 2,049 ரூபாயும், டெல்லி - கொல்கத்தாவுக்கு 2,699 ரூபாயும், டெல்லி - மும்பைக்கு 2,599 ரூபாயும், டெல்லி - பாட்னா 1,999 ரூபாயும், இதே டெல்லி - சூரத்திற்கு 2,499 ரூபாயும், டெல்லி - விசாகப்பட்டினத்திற்கு 3,799 ரூபாயும் நிர்ணயித்துள்ளது.
இதோ கட்டணம்
இதே போல் பெங்களுரு - அஹமதாபாத் வரையில் பயணிக்க 2,699 ரூபாயும், பெங்களூரு முதல் பாக்தோக்ரா வரையில் 3,999 ரூபாயும், பெங்களூரு - புவனேஸ்வர் வரையில் பயணிக்க 2,899 ரூபாயும், பெங்களூரு முதல் அவுரங்காபாத் வரையில் பயணிக்க 2,699 ரூபாய் கட்டணமும், பெங்களூரு முதல் கோவா வரை செல்ல 1,299 ரூபாயும், பெங்களூருவில் இருந்து சென்னை செல்ல 1,299 ரூபாயும், பெங்களூருவில் இருந்து டெல்லி வரை செல்ல 2,899 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக இந்தி இணையதளம்
உள்நாட்டு விமான பயணிகள் சந்தையில் 48% பங்கினை வகிக்கும் இண்டிகோ, இந்த வார தொடக்கத்தில் விமான முன்பதிவுகளுக்கு தங்கம் விருப்பமான மொழியாக, அதை பயன்படுத்த விரும்பும் பயணிகளுக்கு தனது இந்தி தளத்தை தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சரி சரி வாங்க.. ஒரு ரெய்டு போயிட்டு தான் வருவோம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications