நாடு முழுவதும் கடந்த 2ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது இண்டிகோ.
அண்மையில் மத்திய விமான போக்குவரத்து துறை ஆணையரகம் விமானிகளுக்கான வாராந்திர ஓய்வு நேரத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பித்தது. இண்டிகோ நிறுவனம் இதற்கு ஏற்ற வகையில் கூடுதலாக விமானிகளை பணி நியமனம் செய்யவில்லை. இதன் காரணமாக வழக்கம் போல இண்டிகோ நிறுவனத்தால் தங்களுடைய விமானங்களை இயக்க முடியவில்லை. திடீரென நூற்றுக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டிய சூழல் உண்டானது. இது லட்சக்கணக்கான பயணிகளை பாதிப்படைய செய்திருக்கிறது .

சென்னை, மும்பை ,டெல்லி ,பெங்களூரு ,கொல்கத்தா என பல்வேறு விமான நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் தங்களுடைய விமானம் தாமதமானதா, ரத்தானதா ,தங்களால் நினைத்த இடத்திற்கு செல்ல முடியுமா முடியாதா என்ற குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் மத்திய அரசு எவ்வளவு பெரிய விமான நிறுவனமாக இருந்தாலும் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த அனுமதிக்காது என எச்சரித்தது.
கடுமையான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் ராம மோகன் நாயுடு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் . நாடாளுமன்றத்தில் இண்டிகோ விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த பேசிய அமைச்சர் ராம மோகன் நாயுடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்த ஒரு வாரத்தில் மொத்தமாக 4500-க்கும் அதிகமான விமான சேவைகளை ரத்து செய்திருக்கிறது.

இந்த சூழலில் இண்டிகோ நிறுவனம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதன் தலைமை செயல் அதிகாரி பீட்டர் ஆல்பஸ் பெயரில் வெளியாகி இருக்கக்கூடிய அறிக்கையில், நாங்கள் மீண்டு வந்து விட்டோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உங்களின் விமான சேவை நிறுவனம் , இண்டிகோ மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டது . நம்முடைய விமான செயல்பாடுகள் அனைத்தும் நிலையாக இருக்கின்றன . இத்தனை நாட்களாக நடந்த நிகழ்வுகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 5ஆம் தேதி அன்று இண்டிகோ நிறுவனம் 700 விமானங்களை மட்டுமே இயக்கியது, டிசம்பர் 6ஆம் தேதி 1500 ஆக உயர்ந்தது , டிசம்பர் 7ஆம் தேதி 1650 விமானங்களாக அதனை உயர்த்தினோம், டிசம்பர் 8ஆம் தேதி 1800 விமானங்கள் இயக்கப்பட்டன. இன்றைய தினம் 1800க்கும் அதிகமான விமானங்களை இயக்கி இருக்கிறோம் . நாங்கள் வழக்கம் போல 138 டெஸ்டினேஷங்களுக்கும் விமானங்களை இயக்க தொடங்கிவிட்டோம் நிலைமை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீரடைந்துவிட்டது, சரியான நேரத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன என தெரிவித்திருக்கிறார் . பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய டிக்கெட் கட்டணத்தை திரும்ப தந்திருக்கிறோம், லக்கேஜ்களை உரிய உரிமையாளர்களிடம் வழங்கி வருகிறோம் என கூறி இருக்கிறார். தற்போதைக்கு பிரச்சினையை தீர்த்து இருக்கிறோம் ஆனால் இதிலிருந்து நாங்கள் மிக வலுவாக மீண்டு வந்திருக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications