இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் விமான சேவை நிறுவனமான இண்டிகோ, நான்காவது நாளாகவும் (டிசம்பர் 5) அதிகப்படியான விமான ரத்துக்களும், செயல்பாட்டு குழப்பத்திலும் மூழ்கியிருக்கிறது. இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, இதில் முக்கியமான டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் தவித்தனர், இண்டிகோ நிர்வாகம் பல விமான நிலையங்களில் இண்டிகோ பயணிகளை விமான நிலையத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது. நேற்று 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இண்டிகோ தினமும் 2300 விமானங்கள் இயக்குகிறது, ஆனால் இப்போது பைலட் குறைபாடு, FDTL விதிகள் காரணமாக குழப்பம் காரணமாக 4 நாட்களில் சுமார் 1000 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் டெல்லியில் இருந்து புரப்படும் அனைத்து விமானங்களின் டிக்கெட் விலையும் அதிகரித்துள்ளது.
ஸ்கைஸ்கேனர் தளத்தில் விமான விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. டிசம்பர் 5 டில்லி-மும்பை நேரடி விமானத்திற்கு ஏர் இந்தியா ரூ.25,161, இண்டிகோ ரூ.28,534, ஸ்பைஸ்ஜெட் ரூ.35,851. இண்டிகோ விமான சேவை இல்லாத இடங்களில் டிக்கெட் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இது பயணிகளுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பர் 5ஆம் தேதி எங்களுக்கு மிக கடினமான நாள், 1000க்கும் மேல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார். இதனால் பயணிகளிடம் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்பதாக தெரிவித்தார்.
இனி வரும் நாட்களில் தினசரி விமான ரத்துகள் 1000க்கும் குறைவாக இருக்கும், டிசம்பர் 10-15ஆம் தேதிகளில் நிறுவனத்தின் தேவை இயல்பு நிலைக்கு முழுமையா திரும்பும் என்று உறுதியளித்தார். மேலும் இண்டிகோ நிர்வாகம் விமான ரத்து மூலம் பயணம் செய்ய முடியாத அனைத்து பயணிகளுக்கும் டிசம்பர் 5-15 தேதிக்குள் டிக்கெட்-க்கான முழு ரீஃபண்ட் அளிக்கப்படும், இதேபோல் ரீஷெட்யூல் செய்பவர்களுக்கு இதற்கான கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.
இந்த நிலையில் சிவில் ஆவியேஷன் அமைச்சகம், பயணிகளுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. ஹெல்ப்லைன் எண்: 011-24610843, 011-24693963, 096503-91859. விமான நிலையங்களில் ரியல்டைம் கண்காணிப்பு, விரைவு உதவி செய்யும். மேலும் DGCA, இண்டிகோவுக்கு இரவு பணி விதிகளில் டிசம்பர் 10 வரை விலக்கு அளித்துள்ளது, இதேபோல் இந்த 1000 விமானங்கள் ரத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications