தென் தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக பகுதியாக மட்டும் அல்லாமல் பல கோடிப்பேருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் மாவட்டமாக உள்ளது மதுரை, மீனாட்சி அம்மன், மல்லி, ஜிகர்தண்டா, புரோட்டா - சால்னா என மதுரை குறித்து நாள் முழுக்க பேச விஷயம் இருந்தாலும் மதுரையை முக்கிய வர்த்தக இலக்காக மாற்றியுள்ளது இண்டிகோ.
இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக இருக்கும் இண்டிகோ, தற்போது மதுரைக்கு தினசரி விமான சேவையாக பல இடங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் மதுரைக்கு இந்தியா முழுவதும் இருந்து மக்களை ஈர்க்கும் வண்ணம் விமான சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறது இண்டிகோ.

இதை இண்டிகோ தனது வாடிக்கையாளர்களுக்கு கூற வேண்டும் என திட்டமிட்டு மதுரையில் ஸ்பெஷலான விஷயங்களை தொகுத்து ஒரு கலக்கலான வீடியோவாக வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ கடந்த ஒரு வாரமாக இணையத்தில் பலராலும் பார்த்து வரப்படுகிறது, மதுரையின் ஸ்பெஷலான விஷயம் என நீங்கள் நினைப்பது எது..? மறக்காம கமெண்ட பண்ணுங்க.
மதுரையில் இருந்த தினமும் குறைந்தபட்சம் 16 விமானங்கள் இயக்கப்படுகிறது, குறிப்பாக சென்னைக்கு அதிகப்படியான விமானங்கள் இயக்கப்படுகிறது, சென்னை தொடர்ந்து பெங்களூர், மும்பை, ஹைதரபாத், டெல்லி ஆகிய நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகிறது.
இண்டிகோ மட்டும் தினமும் 11 விமானங்களை மதுரையில் இருந்து தினமும் இயங்கி வருகிறது, இதை இந்திய விமான பயணிகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவே இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளது. மதுரையில் இருந்து இண்டிகோ உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கி வருகிறது.
இதில் முக்கியமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துபாய்-க்கு தினமும் மதுரையில் இருந்து விமானத்தை இயக்கி வருகிறது. இதை தாண்டி கொழும்பு-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்-ம், சிங்கப்பூர்-க்கு ஏர் இந்தியா ஏக்ஸ்பிரஸ்-ம் மாதத்தில் சில நாட்களில் மட்டுமே விமானத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் தற்போது ஏகப்பட்ட ஐடி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்துள்ளதால் இனி வரும் காலத்தில் மதுரை விமான நிலையத்தில் விமான பணிகள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் கடந்த 5 வருடத்தில் மதுரை தமிழ்நாட்டின் முக்கிய முதலீட்டு சந்தையாக மாறியுள்ளது, கட்டுமான துறை முதல் ஐடி துறை வரையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications