இந்தியாவின் மிகப்பெரிய விமான பயணிகள் விமான சேவை நிறுவனமான இண்டிகோ-வின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் தனது பதவியை உடனடியாக விட்டு விலக உள்ளதாகவும், தனது நோட்டீஸ் பிரியர்ட் காலத்தை ரத்து செய்யுமாறும் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
இந்திய விமான சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் அடுத்தடுத்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதேவேளையில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளும், ஈரான் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்வு இத்துறையின் லாபத்திற்கு வேட்டு வைத்து வருகிறது.

இந்த நிலையில் இண்டிகோ விமானங்களை இயக்கும் அதன் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (InterGlobe Aviation Ltd) இன்று மாலை பங்குச் சந்தைக்கு அளித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் பாடியா இடைக்கால அடிப்படையில் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்துக்கொண்டு அனைத்து பணிகளையும் கவனித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்டர் எல்பர்ஸ் தனது ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக இப்பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார், இதேவேளையில் ராஜினாமா கடிதத்தில் நோட்டீஸ் காலத்தை விலக்கிக் கொள்ளுமாறு இன்டர்குளோப் ஏவியேஷன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் இண்டிகோ பங்குகள் 3.46 சதவீதம் உயர்ந்து 4383 ரூபாய் விலைக்கு முடிவடைந்துள்ளது, 2026ல் மட்டும் இப்பங்கு 14.23 சதவீதம் குறைந்துள்ளது.
இண்டிகோ நிர்வாக குழு மார்ச் 10 அன்று நடந்த கூட்டத்தில் பீட்டர் எல்பர்ஸ்-ன் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது. இந்த மாற்றம் நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாட்டு சிக்கல்களுக்கு பிறகு வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இண்டிகோ நிறுவனத்தின் இயக்கத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு சுமார் 4,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் பெரும் கருப்பு புள்ளியாக அமைந்தது. இந்த விவகாரத்தை மத்திய விமான போக்குவரத்து துறை தலையிட்டு சரி செய்தது.
மத்திய அரசு பைலட் மனநிலை மற்றும் சோர்வு குறித்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன, ஆனால் இண்டிகோ குழு அட்டவணையை சரியான நேரத்தில் சரியாக புதுப்பிக்கத் தவறியது. இதனால் இண்டிகோ விமானங்களை இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இது மட்டும் அல்லாமல் இண்டிகோ நிறுவனம் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியது.


Click it and Unblock the Notifications