இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் ஏழாவது நாளாக திங்கட்கிழமையும் தொடர்கிறது என்பது பெரும் சோமான விஷயமாக மாறியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம், ஒரு நாளுக்கு 2300 விமான பயணங்களை மேற்கொள்ளும் போக்குவரத்து நெட்வொர்க் முடங்கினால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது.
இந்தியா முழுவதும் சேவை அளிக்கும் இண்டிகோ 7வது நாளில் டெல்லி முதல் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வரையில் நாடு முழுவதும் சுமார் 370 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் டெல்லியில் மட்டும் 134, பெங்களூரில் மட்டும் 127 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் பதிவான 1000, 1600 விமானங்கள் ரத்துக்களை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாக இருக்கிறது என்றாலும் அதிகளவிலான பயணிகளை இந்த சம்பவம் பாதித்துள்ளது. விமான பயணிகளை தாண்டி பங்கு முதலீட்டாளர்களையும் அதிகளவில் பாதித்துள்ளது.
திங்கட்கிழமை மட்டும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 77 இண்டிகோ விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 38 arrivals மற்றும் 39 departures விமானங்கள். இதேபோல் அஹமதாபாத்தில் 18 விமானங்கள் ரத்து, திருவனந்தபுரத்தில் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜெய்ப்பூர், சென்னை, மும்பை, கோவா போன்ற இடங்களில் பயணிகள் இன்னும் தவித்து வருகின்றனர்.
இண்டிகோ பங்குகள் தொடர் சரிவு
இந்த மோசமான பாதிப்பு காரணமாக இண்டிகோ-வின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 9 சதவீதம் வரையில் சரிந்து ஒரு பங்குவிலை ரூ.4896க்கு வந்துள்ளன. கடந்த வாரம் DGCA-வின் குற்றஞ்சாட்டு மற்றும் விசாரணை அறிவிப்புக்குப் பின்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றுடன் 7வது நாளாக தொடர்ச்சியாக சரிவை பதிவு செய்து வருகிறது.
ஸ்பைஸ்ஜெட் பங்குகள் தடாலடி உயர்வு
இண்டிகோ நிறுவனத்தின் சேவை பாதிப்பாலும், விமானங்கள் ரத்து செய்யப்படுவதாலும் சக போட்டி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் பங்குகள் இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் 8 சதவீதம் உயர்ந்து BSE-யில் ரூ.35.50 உச்சத்தை தொட்டது. கடந்த 2 வர்த்தக நாளில் மட்டும் சுமார் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த தடுமாற்றத்தை பயன்படுத்தி முதலீடு செய்தவர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்க உள்ளது. இதேபோல் இண்டிகோ பங்குகள் தற்போது பெரிய அளவிலான சரிவை பதிவு செய்திருக்கும் வேளையில் புதிதாக வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமையலாம்.
இண்டிகோவுக்கு தற்போது DGCA விசாரணை உட்பட பல பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தாலும், அதன் மலிவு விலை சேவை காரணமாகவும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சிகளை மேற்கொள்ளும். இண்டிகோவின் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் தடுமாற்றம் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் லாபமாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
இதேவேளையில் இந்திய விமான போக்குவர்த்து சந்தையை பார்க்கும் போது ஜெட் ஏர்வேஸ், கோ ஏர் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற நிர்வாகம், விதிமுறை பிரச்சனைகளில் சிக்கிய போது அதிகப்படியான வர்த்தகத்தை இழந்ததும் நடந்துள்ளது. இதனால் இண்டிகோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன் தீவிரமாக ஆய்வு செய்து, ஆலோசனை பெற்று முடிவு செய்யுங்கள்.
ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்வையும், சரிவையும் எப்படி கையாள வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். இதேபோல் பங்குச்சந்தை முதலீடு என்பது லாட்டரி போன்று இல்லை, முழுக்க முழுக்க கணக்கு, ஆய்வு, கணிப்புகள் உள்ளடக்கியது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications