இண்டிகோ விமான நிறுவனம் டிசம்பர் 2ஆம் தேதி முதல் தினமும் நுற்றுக்கணக்கான விமானங்களை நாடு முழுவதும் ரத்து செய்து வருவதால் விமான பயணிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர். மத்திய அரசும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் இந்திய வான்வழி போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது.
இண்டிகோ நிர்வாகம் இதுவரையில் சுமார் 5,000 விமானங்களை ரத்து செய்துள்ளது, இதன் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் குறித்த நாளில் குறித்த நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர். இதன் விளைவாக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளது.

இந்த நிலையில் இண்டிகோவின் தினசரி விமான சேவையில் (flight schedule) 5 சதவீதத்தை அதாவது சுமார் 110 விமானங்கள் சேவைகளை, வேறு விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கலாம் என விமான போக்குவரத்து அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால் இந்த குறைப்பு அளவுக்கு அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது இண்டிகோ-வின் 2200 தினசரி விமான சேவையில் 5 சதவீதம் (110 விமான சேவை) ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், அகாசா போன்ற நிறுவனங்களுக்கு அளிக்க ஆலோசனை செய்து வருகிறது. 5 சதவீதம் விமானங்கள் பயன்படுத்தும் விமான நிறுத்தும் இடம், டேக் ஆப் அனுமதி, வழித்தடம் ஆகியவை மற்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். இதன் மூலம் கூடுதலாக விமான பயணிகளுக்கு சேவை அளிக்க முடியும். இதேபோல் இண்டிகோ தனது சேவையை மேம்படுத்தவில்லை எனில் 5 சதவீதம் என்பது அடுத்தக்கட்டத்தில் 10 சதவீதமாக மாறவும் வாய்ப்புள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் இந்த மோசமான நெருக்கடியின் முக்கிய காரணம், நவம்பர் 1ஆம் தேதி அமலான புதிய பைலட் பணி நேர விதிமுறைகள் (Flight Duty Time Limitations - FDTL). இந்த விதிமுறை மூலம் பைலட்டர்களுக்கு வாரத்துக்கு 48 மணி நேர விரிவான ஓய்வு அளிக்க வேண்டும் என்ற கட்டுப்படுகளை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த விதமுறை கொண்டு வருவதாக மத்திய அரசு முன்கூட்டியே அறிவித்து இருந்தாலும் அதை சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்த இண்டிகோ தவறியுள்ளதன் விளைவே தற்போதை நிலை.
இண்டிகோ குறைந்த செலவு நிறுவனம் என்பதால் தனது பைலட் மற்றும் க்ரூ ஊழியர்களை முடிந்த வரையில் அதிகளவில் பயன்படுத்தி வந்தது. இதனால் இந்த புதிய விதிமுறை செயல்படுத்த கூடுதல் பைலட் மற்றும் க்ரூ ஊழியர்களை தேவை என்பதால் இதை உடனடியாக பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், அகாசா போன்ற நிறுவனங்களுக்கு இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு போதுமான பைலட் மற்றும் க்ரூ ஊழியர்களை ஏற்கனவே வைத்திருந்த காரணத்தால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தற்போது இயங்கி வருகிறது.
நவம்பர் மாதம் மட்டும் இண்டிகோ 5000 விமானங்கள் ரத்து ஆன நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி 1,000 - 1600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது இண்டிகோவின் 20 ஆண்டு வரலாற்றில் மிகப்பெரிய இழப்பு. நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு எனக் கூறியாலும், அரசு இது குழும நிர்வாகம் மற்றும் திட்டமிடலில் ஏற்பட்ட தோல்வி என விமர்சித்துள்ளது.
இண்டிகோ பிரச்சனை குறித்து விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயிடு, ராஜ்ய சபாவில் பேசிய போது, " அரசு இண்டிகோவின் இந்த சூழலை லேசாக எடுத்துக்கொள் போவது இல்லை. விசாரணை நடத்தி, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இது ஒரு உதாரணமாக அமையும்."
இண்டிகோ மூத்த மேலாளர்கள் மீதான தவறு நிரூபணம் ஆகும் பட்சத்தில் இண்டிகோவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி Isidre Porqueras-க்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.1 கோடி அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என கடந்த வருடம் ஒப்புதல் அளித்த புதிய விமான சேவை விதிமுறைகள் கூறுவதாக எக்னாமிக் டைம்ஸ் தனது செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications