மும்பை: இந்தியாவில் அண்மை காலமாக அடிக்கடி விமானங்களில் கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பன உங்களிடம் செய்திகளை நாம் அதிகம் காண முடிகிறது. குறிப்பாக கடந்த மாதம் ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்ததிலிருந்து விமானங்கள் தொடர்பான செய்திகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே அதன் என்ஜின் செயலிழந்து இருக்கிறது. இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் டெல்லியில் இருந்து கோவா நோக்கி புறப்பட்ட நிலையில் திடீரென அது அவசர அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது. என்ஜின் செயலிழந்ததே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

புதன்கிழமை அன்று 6E 6271 என்ற இண்டிகோ நிறுவன விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. டெல்லியில் இருந்து கோவாவை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென விமானத்தின் ஒரு என்ஜின் செயலிழந்து போனது. உடனடியாக சுதாரித்து கொண்ட விமானிகள் அருகில் மும்பை சர்வதேச விமான நிலையம் இருப்பதை அறிந்து உடனடியாக தகவல் அளித்தனர்.
மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானிகள் ஒரு என் ஜினை வைத்து விமானத்தை இயக்கி சாமர்த்தியமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கினர். விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதனை அடுத்து வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அதில் கோவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்ட இண்டிகோ விமானம் பார்ட்னா விமான நிலையத்தின் தரையிறங்கும் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஓடுபாதை வருவதற்கு முன்னதாகவே விமானிகள் விமானத்தை தர இயக்கிய நிலையில் ஓடு பாதையின் நீளம் போதுமானதாக இல்லை என்பதை உணர்த்து மீண்டும் விமானத்தை டேக் ஆப் செய்தனர்.
இதனை அடுத்து வானத்திலேயே மூன்று முறை வட்டமிட்டு பின்னர் பாதுகாப்பாக ஓடு பாதையில் தரையிறக்கினர். இந்த விமானத்தில் பயணம் செய்த 173 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பினர் . விமானிகளின் துரித செயல்பட்டால் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த மாதம் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டது. சில வினாடிகளிலேயே விமானம் அங்கேர் இருந்த கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. என்ஜின்களுக்கான எரிபொருள் செல்லும் சுவிட்ச் நடுவானில் அணைக்கப்பட்டதால் எரிபொருள் செல்லாமல் என்ஜின்கள் செயலிழந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications