ஏர் இந்தியா விபத்தை தொடர்ந்து இந்தியாவில் அடுத்தடுத்து பல விமான கேளாறுகள் ஏற்படுவது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் டூ திருப்பதி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் சில கோளாறு காரணமாக திடீரென் தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெங்களூரில் அவசர அவசரமாக லேண்டிங் செய்யப்பட்டு உள்ளது.
கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வரும் இண்டிகோ விமானம் (6E-6764), எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஜூலை 19ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என டைம்ஸ் பத்திர்க்கை தெரிவித்துள்ளது. 168 பயணிகளுடன் பயணித்த இந்த விமானத்தின் விமானி, பெங்களூருவில் இருந்து 35 மைல் தொலைவில் "மேடே" என அறிவித்து ATC-க்கு அவசர அறிவிப்பை விடுத்தார், இதைதொடர்ந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம் பெங்களூரில் தரையிறக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

ஏர்பஸ் நிறுவனத்தின் A321 ரக விமானம் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து மாலை 4:40 மணிக்கு புறப்பட்டு, சென்னையில் இரவு 7:45 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டு இருந்து, ஆனால் எரிபொருள் பிரச்சனை காரணமாக விமானத்தை குறித்த நேரத்திலும், குறித்த இடத்திற்கும் பயணிக்க முடியாமல் பெங்களூர்-க்கு திருப்பினார் விமானி.
இரு விமானிகளும் விசாரணை முடியும் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இண்டிகோ, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக, தினசரி 2,000 விமானங்களை இயக்குகிறது, ஆனால் இந்த சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை.
இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் கூறுகையில், விமானம் திடீரென செங்குத்தாக பயணிக்க துவங்கியது. இது அனைத்து பயணிகளுக்கும் சற்று பயத்தை ஏற்படுத்தியதாக கூறினார். மேலும் இந்த விமானத்தை இயக்கிய இரு விமானிகளும் விசாரணை முடியும் வரை பணியில் இருந்து ஓய்வு பெற நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் பல்வேறு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதை குட்ரிட்டன்ஸ் தளம் தனிப்பட்ட முறையில் உறுதி செய்யவில்லை.
இண்டிகோ, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக உள்ளது. தினமும் 2,000 விமானங்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இயக்குகிறது, ஆனால் இந்த சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. இந்த சம்பவம், விமான எரிபொருள் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து DGCA, இண்டிகோவின் எரிபொருள் கொள்கைகளை ஆய்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள், 60% சந்தை பங்கு வகிக்கும் இண்டிகோவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications