நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட அனைத்து பிரதான விமான நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
அண்மையில் மத்திய விமான போக்குவரத்து ஆணையரகம் விமானிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு நேரத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது . இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்தான் இண்டிகோ நிறுவனம் தன்னுடைய நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளி இருக்கிறது.

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நூற்று கணக்கிலான விமானங்கள் தாமதம் ஆகியிருக்கின்றன . மருத்துவ தேவைக்காக செல்ல வேண்டிய செல்ல வேண்டியவர்கள், குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வதற்காக செல்ல வேண்டியவர்கள், பிசினஸ் சம்பந்தப்பட்ட மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக செல்ல வேண்டியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இண்டிகோ விமான சேவை ரத்தானதால் அண்மையில் மணமுடித்த தம்பதிகள் தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே கலந்து கொள்ள முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவின் ஹப்பள்ளியை சேர்ந்த மேகா என்பவருக்கும், ஒடிசாவின் புவனேஸ்வரை சேர்ந்த சங்கம் தாஸ் என்பவருக்கும் கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருக்கிறது.
புவனேஸ்வரில் திருமணம் முடிந்த நிலையில் மணமகள் வீட்டால் ஹப்பள்ளியில் இருவருக்குமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். புதன்கிழமை திருமண வரவேற்பு நடைபெறுவதாக இருந்தது. இதற்காக இருவரும் புவனேஸ்வரில் இருந்து பெங்களூருக்கு வருவதற்கு இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர் . இருவரும் சரியான நேரத்தில் விமான நிலையம் வந்துவிட்டனர். முதலில் விமானம் தாமதமாகியுள்ளது. எப்படியாவது வந்துவிடலாம் என இருவரும் முயற்சி செய்த நிலையில் புதன் அன்று திடீரென விமானம் ரத்து என அறிவித்துவீட்டார்களாம்.

இதன் காரணமாக என்ன செய்வது என தெரியாமல் இருவரும் திகைத்து நின்றனர் . ஏற்கனவே இருவரின் பெற்றோரும் ஹப்பள்ளியில் 10 நாட்கள் முன்னதாகவே வந்து திருமண வரவேற்பு ஏற்பாடுகளை முடித்து விட்டனர். திருமண வரவேற்புக்கு மண்டபம் தயாராகி அலங்காரம் செய்யப்பட்டது உறவினர்களும் வருகை தர தொடங்கி விட்டனர்.
ஆனால் மணமகளும், மணமகளும் வர முடியவில்லை, இந்த சூழலில் இருவரையும் ரெடியாக சொல்லி வீடியோ காலில் வரவழைத்து அவர்களை பெரிய டச் ஸ்கிரீனில் மண்டபத்தில் லைவ் பிளே செய்து வரவேற்பை நடத்தி முடித்துள்ளனர். இண்டிகோ நிறுவனத்தின் ஒரு தவறு ஒரு இளம் தம்பதியின் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தையே தவற விட்டிருக்கிறது.
இண்டிகோ நிறுவனம் கூறும் மன்னிப்பு இவர்களின் இந்த ஸ்பெஷலான தருணத்தை திருமப் தந்துவிடுமா இல்லை. இருந்தாலும் சமயோஜிதமாக சிந்தித்து வீடியோ காலில் ரிஷப்சனை முடித்த இவர்களுக்கு பாராட்டுகளும் குவிகின்றன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications