இண்டிகோ விமான நிறுவனத்தில் நடந்த மோசமான பாதிப்பு தான் கடந்த 2 வாரங்களாக மத்திய அரசின் முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது. டிசம்பர் 2ஆம் தேதி முதல் சுமார் 5300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது மூலம் பல லட்சம் விமான பயணிகள் பயணம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சனை குறித்து தீவிரமாக விசாரணை செய்து வரும் மத்திய அரசு இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயடு ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இண்டிகோவுக்கு 10 சதவீத விமான சேவைகளை (routes) குறைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை விரைவாக சரி செய்ய உதவும்.

கடந்த வாரம் இண்டிகோ குழும நிர்வாகத்தில் ஏற்பட்ட பைலட் மற்றும் க்ரூ ரோஸ்டர், விமான அட்டவணை தவறுகள், போதிய தகவல் தொடர்பின்மை காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை சந்தித்தனர். இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை விசாரணை மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இண்டிகோ-வின் உயர்மட்ட அதிகாரிகள் உடன் கூட்டம் நடத்துள்ளது.
டிசம்பர் 9ஆம் தேதி இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ் மீண்டும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தில் அழைக்கப்பட்டார், இக்கூட்டத்தில் இண்டிகோ நிறுவனத்தின் தற்போதைய நிலைமை அப்டேட் மத்திய அமைச்சகத்திற்கு கொடுத்தார்.
டிசம்பர் 6 வரையிலான ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான 100 சதவீத refunds கொடுக்கும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக உறுதியளித்தார். மீதமுள்ள ரீபண்ட் மற்றும் பேகேஜ் ஆகியவற்றை கொடுக்கும் பணியை விரைவுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தர்.
இந்த முக்கியமான கூட்டத்தின் முடிவில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், இண்டிகோவின் மொத்த சேவை வழித்தடத்தை குறைப்பது தற்போது மிகவும் அவசியம் என அறிவிக்கப்பட்டது. இதன் படி இண்டிகோ தனது தேவையை இயல்பு நிலைக்கு திரும்ப கொண்டு வரும் வரையில், 10 சதவீத வழித்தடத்தில் சேவையை குறைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை இண்டிகோ கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இண்டிகோவுக்கு இன்று விமான கட்டண கட்டுப்பாடு (fare capping), பயணிகள் வசதி நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவையும் எவ்விதமான விதிவிலக்கும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயடு ட்விட்டரில் தெரிவித்தார். இந்த நடவடிக்கை மூலம் இண்டிகோ விரைவில் தனது சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications