இந்திய விமான போக்குவரத்து சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஏர் இந்தியாவுக்கு கடுமையான போட்டி கொடுக்க திட்டமிட்டு நாட்டின் மிகப்பெரிய பயணிகள் விமான சேவை நிறுவனமான இண்டிகோ சுமார் 500 ஏர்பஸ் 320 விமாங்களை ஆர்டர் செய்துள்ளது.
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் தனது வரலாற்றில் எப்போதும் பெற்றிடாத வகையில் ஒரே ஆர்டரில் சுமார் 500 விமானங்களை இண்டிகோ ஆர்டர் செய்து அசத்தியுள்ளது. மார்ச் மாதம் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா சுமார் 470 விமான நிறுவனங்களை ஆர்டர் செய்தது.

உலகளவில் 3வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இருக்கும் இந்தியாவின், இண்டிகோ நிறுவனத்தின் ஆதிக்கம் இந்த 500 விமானங்கள் மூலம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய சந்தையில் ஏர் இந்தியாவும் சரி, இண்டிகோ நிறுவனமும் சரி சேவை அளிக்கும் இடங்களை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆசிய சந்தையில் மக்கள் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தொகையை பயணங்களுக்காக செலவு செய்ய துவங்கியுள்ளனர். இதனால் விமான போக்குவரத்து இந்தியாவில் சூடுப்பிடித்துள்ளது, மேலும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்நாட்டு விமான சேவை உடன் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருவதால் விரைவில் இந்திய ஏவியேஷன் துறையில் வியக்க வைக்கும் மாற்றத்தை பார்க்க முடியும்.
இண்டிகோ ஆர்டர் செய்துள்ள இந்த 500 ஏர்பஸ் 320 ரக விமான ஆர்டரின் மொத்த மதிப்பு 50 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கிடப்படுகிறது. 50 பில்லியன் டாலர் எனில் இந்திய ரூபாய் படி சுமார் 4.10 லட்சம் கோடி ரூபாய்.
இந்தியாவில் பல சேவைகள் எளிதாக தற்போது கிடைப்பது போல் பிரைவேட் ஜெட்-ஐ சொந்தமாக்குவதும் தற்போது ஈசியாகியுள்ளது எப்படி. இந்திய விமான சேவையில் புரட்சியை செய்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் முன்னாள் வருவாய் பிரிவு தலைவரும், மார்கெட்டிங் பிரிவின் தலைவருமான ஜான் குருவில்லா OTT தளத்திற்கு சப்ஸ்கிரிப்ஷன் செய்வது போல பிரைவேட் ஜெட்-க்கு சப்ஸ்கிரிப்ஷன் மாடல் கொண்ட வர்த்தகத்தை Indiajets நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார்.
இதோடு Go First நிறுவனத்தின் வர்த்தக இடத்தை நிரப்ப ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மத்திய அரசிடம் 400 கோடி ரூபாய் கடனை பெற்று இந்நிறுவனம் தரையிறக்கப்பட்ட 25 விமானங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications