ஏர்பஸ் நிறுவனம் இந்த மாக துவக்கத்தில் இண்டிகோ 30 ஏ350-900 ரக விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் தந்துள்ளதாக அறிவித்தது.
இந்த ஆர்டர் மூலம் தொலைதூர சர்வதேச தடத்துக்கு இந்த விமானங்களை பயன்படுத்த இண்டிகோ விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து துறையில் உலகில் விரைவாக வளர்ந்து வரும் இந்தியா ஒரு சர்வதேச டிராவல் பூம் ஆக ஆகும். அதன் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற விமானம் ஏ350 என்று ஏர்பஸ் கூறியுள்ளது.
இண்டிகோ நிறுவனம் விரைவில் தனது தளத்தை விரிவுபடுத்த உள்ளது. ஏப்ரல் 25 ஆம் தேதியன்று இந்த புதிய விமானங்கள் ஆர்டரை செய்து முடித்தவுடன் இந்த பட்ஜெட் கேரியர் நிறுவனம் பரந்தவெளி சந்தைக்கு வந்தது.
இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ உலக அளவிலும் மிகப் பெரிய பட்ஜெட் கேரியராக பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்தில் முன்னணியில் உள்ள இண்டிகோ இப்போது உலகளவிலும் தனது இருப்பை முன்னுக்குக் கொண்டு வர இலக்கு வைத்துள்ளது. அதற்கு நான்-ஸ்டாப் சர்வீஸ்கள், நீண்ட தொலைவு தடங்கள் போன்ற திட்டங்களை வைத்துள்ளது.
இதனிடையே இண்டிகோ ஆர்டர் பற்றி ஏர்பஸ் நிறுவனம் கூறுகையில், ஏ350 மிகவும் நவீனமான மற்றும் திறன் வாய்ந்த விமானம் என்றும் இதில் 300 முதல் 410 பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என்றும் கூறியுள்ளது. இந்த ஆர்டர் மூலம் இண்டிகோ சர்வதேச டிராவல் மார்க்கெட்டில் கணிசமான பங்கைக் கைப்பற்ற நினைப்பது தெரிகிறது.
இந்த நிலையில் இண்டிகோ பாலி, மெதினா ஆகிய நகரங்களுக்கு இடையே புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. 2024 நிதியாண்டுக்குள் 10 கோடி பயணிகளை எட்ட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
இப்போது இந்தியாவில் 85 நகரங்கள், உலகளவில் 32 நகரங்கள் இடையே இண்டிகோ நிறுவனம் தனது விமானங்களை இயக்கி வருகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் இப்போது இருக்கும் அளவைவிட இருமடங்காக சேவையை அதிகரிக்க வேண்டும் என்பதே இண்டிகோ விமான நிறுவனத்தின் நோக்கம் ஆகும். இதனால் அதன் உள்நாட்டு, சர்வதேச சேவைகளை அதிகரித்து வருகிறது.
2025 ஆம் ஆண்டுக்குள் ஏ321 எக்ஸ்எல்ஆர் ரக விமானங்களை அறிமுகப்படுத்தவும் இண்டிகோ விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக லாபத்தில் இயங்கிவரும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் புதிய விமானத்தை அறிமுகத் திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் உள்நாடு, சர்வதேச தடங்களில் எங்கள் சேவையை விரிவுபடுத்துவோம். 2023 ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின் போது ஏர்பஸ் நிறுவனத்திடம் 500 விமானங்கள் வாங்குவதற்கான ஆர்டரை அளித்தோம் என்றார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications