இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் பார்டரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் விமான நிலையங்கள் தங்கள் விமான சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. இண்டிகோ நிறுவனமும் சில விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்து ரீபண்ட் பெற முயற்சி செய்யும்போது அதிகப்படியான கேன்சலேஷன் சார்ஜ் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
சிலர் சமூக வலைதளங்களில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சண்டிகரில் இருந்து மும்பை செல்லும் விமானத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. அப்போது ஒரு பயணியிடமிருந்து 8,111 ரூபாய் கேன்சலேசன் சார்ஜ் வசூலித்ததாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட் ஒன்று தற்போது X தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அதிகப்படியான ரத்து கட்டணத்தால் அதிருப்தி அடைந்த பயணி ஒருவர் தனது X பக்கத்தில், "இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இண்டிகோ 80 சதவீதம் கட்டணத்தை பிடித்தம் செய்வது அப்பட்டமான கொள்ளை. மற்ற விமான நிறுவனங்களும் இதே காரணத்திற்காக ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு முழுத் தொகையையும் திரும்ப கொடுத்துள்ளன", என்று ஆவேசமாக குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
தான் ரூ.10,000-த்திற்கு மேல் செலவழித்து வாங்கிய டிக்கெட்டுக்கு, வெறும் ரூ.2,050 மட்டுமே திரும்ப கிடைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதோடு இந்த அதிகப்படியான கட்டணத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அவருடைய X பதிவுக்கு இண்டிகோ நிறுவனம் பதில் அளித்தது. பயணியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த இன்டிகோ நிறுவனம், "பயணிக்கான முழு தொகையும் தங்கள் தரப்பிலிருந்து திரும்ப கொடுக்கப்பட்டதாகவும், டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் மூன்றாம் தரப்பு தளத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இது போன்ற தகவல் வெளியாகி இருக்கிறது" என்றும் பதிலளித்திருந்தது.
அதோடு இண்டிகோ நிறுவனம் டிக்கெட் முன்பதிவுக்கான முழுத் தொகையும் தங்கள் தரப்பிலிருந்து திரும்ப அளிக்கப்பட்டது என்றும், பயணி பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட் பயண ஏஜென்டின் தளத்தைச் சேர்ந்ததாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டிருந்தது. எனவே முழுப் பணத்தையும் திரும்ப பெறுவதற்கு நேரடியாக அந்த ஏஜென்டை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி! என்று தெரிவித்திருந்தது.
குறிப்பிட்ட சில விமானங்களுக்கு செல்லும் விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களுக்கான ரத்து கட்டணம் மே 22-ஆம் தேதி வரை தள்ளுபடி செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. இருந்தாலும் இது போன்ற புகார்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளன. ஒருவர் பாட்னாவிலிருந்து சண்டிகர் செல்லும் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும், விமான நிறுவனம் ரூ.8000-த்திற்க்கு மேல் கேன்சலேஷன் சார்ஜ் வசூலித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
விபோர் என்ற அந்தப் பயணி, "டிக்கெட் கட்டணத்தை ரீபண்ட் பெற நான் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். இந்த விஷயத்தில் உடனடியாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தலையிட்டு சரி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
மே 9-ஆம் தேதி அன்று, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்த்சர், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானேர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களையும் மே 10-ஆம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்வதாக இண்டிகோ அறிவித்திருந்தது. மேலும், ஜம்மு, அமிர்த்சர், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்களுக்கான விமான சேவைகள் மே 13 அன்று ரத்து செய்யப்பட்டன.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications