சென்னை: இந்தியாவில் விமானம் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்துமே வேகமாக மக்கள் கவனம் பெறுகின்றன. இதற்கு காரணம் அண்மையில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து என கூறலாம். இந்த விபத்தை அடுத்து மக்கள் மத்தியில் விமான பயணம் என்றாலே அச்சம் ஏற்படுகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு ஒரு மோசமான அனுபவம் கிடைத்திருக்கிறது. விமானி இல்லாததன் காரணமாக இண்டிகோ நிறுவனத்தில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏர் இந்தியா விமான விபத்தை அடுத்து மக்கள் மத்தியில் விமான பயணம் தொடர்பாக அச்சம் எழுந்துள்ளது.

இந்த அச்சத்தை போக்க வேண்டியது விமான சேவை நிறுவனங்களின் கடமை. ஆனால் அதற்கு மாறாகவே சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. சென்னையில் இருந்து பாட்னாவுக்கு புறப்படக்கூடிய இண்டிகோ விமானத்தை இயக்குவதற்கு விமானி இல்லாததன் காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மாத்ருபூமி தளத்திற்கு இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி அளித்த தகவலின் மூலம் இந்த விவரம் வெளியாகி இருக்கிறது.
இண்டிகோவுக்கு சொந்தமான 6E 539 விமானம் கொச்சியிலிருந்து புறப்பட்டு இருக்கிறது. இந்த விமானம் பாட்னாவை நோக்கி செல்ல வேண்டியது. சென்னை விமான நிலையத்தில் இடை நிறுத்தமாக விமானத்தை இறக்கியுள்ளனர். காலை 11 மணி அளவில் விமானத்தை நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதனை அடுத்து சென்னையில் இருந்து பாட்னா செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.
இந்த சூழலில் திடீரென விமான சேவை நிறுவனம் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கும்படி கேட்டு இருக்கிறது. பயணிகள் காரணம் கேட்டதற்கு விமானத்தை இயக்குவதற்கு தற்போது விமானி இல்லை என பதில் அளித்துள்ளனர். பயணிகள் உடனே விமானத்தில் இருந்து இறங்கியுள்ளனர். மீண்டும் எப்பொழுது விமானம் இயக்கப்படும் என்ற தகவல் வழங்கப்படவில்லையாம். பயணிகள் அனைவருமே சுமார் 2 மணி நேரம் சென்னை விமான நிலையத்திலேயே காத்திருந்திருக்கின்றனர்.
பின்னர் 1.15 மணியளவில் இந்த இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து பாட்னாவை நோக்கி புறப்பட்டு இருக்கிறது. விமானி இல்லாத காரணத்தால் விமான பயணிகள் 2 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications