கரப்பான் பூச்சி போராட்டத்திற்கு எல்லோரும் வாங்க.. நடுவானில் இண்டிகோ விமான பயணி செய்த சம்பவம்!

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (CJP) நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் போட்டித் தேர்வு குளறுபடிகளை கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்து தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை தாண்டி மாணவர்கள் அமைப்பு, பல்வேறு சமுக நல அமைப்புகளும் ஆதாரவு தெரிவித்து வருகின்றனர்.

கரப்பான் பூச்சி போராட்டத்திற்கு எல்லோரும் வாங்க.. நடுவானில் இண்டிகோ விமான பயணி செய்த சம்பவம்!

இந்த நிலையில் இப்போராட்டத்தில் மக்களின் பங்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்யும் போது சக பயணிகளை கரப்பான் பூச்சி போராட்டத்திற்கு எல்லோரையும் கலந்துக்கொள்ள அழைத்தது மட்டும் அல்லாமல் மக்களின் ஆதரவை திரட்டும் வீடியோ சமுக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

அக்ஷய் சோனாவேனே என்பவர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஓருவர், டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள இந்த விமானத்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் நன்றி, அதேபோல் இந்த விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு யாருக்கேனும் உதவி வேண்டுமெனில் தங்குவதற்கு இடமோ, போக்குவரத்து வசதியோ அல்லது வேறு உதவி வேண்டுமானலும் சரி என்னிடம் கேளுங்கள், என்னுடைய நண்பர்களும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள இந்த விமானத்தில் பயணிக்கிறோம். எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்ய தயாராக உள்ளோம்.

இதேபோல் டெல்லிக்கு வேறு காரணங்களுக்கான பயணம் செய்பவராக இருந்தால் ஜந்தர் மந்தரில் நடக்கும் அமைதியான போராட்டத்தில் கலந்துக்கொண்டு எங்களுக்கும், நாட்டின் நலனுக்கும் ஆதரவு கொடுங்கள். நன்றி என பேசி முடிக்கிறார்.

இந்த வீடியோவுக்கு கேப்ஷனான நாட்டுக்கான பேசும் போது பயம் இருக்க கூடாது என போடப்பட்டு உள்ளது. இந்த நபர் பேசி முடித்த உடன் கைத்தட்டியது மட்டும் அல்லாமல் சமுக வலைத்தளத்தில் பலரும் ஆதரவு அளிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.

இதேவேளையில் தான் இன்று தர்மேந்திர பிரதான் குளிர்கால கூட்டம் துவங்குவது முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்து பேசினார். ஜூன் 20ஆம் தேதி முதல் அபிஜித் தீப்கே நடத்தும் இந்த அமைதி போராட்டம் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் மூலம் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

சோனம் வாங்சுக்-ன் ஜூலை 28ஆம் தேதி முதல் இப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் காரணத்தால் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு இருக்கும் வேளையில் மத்திய அரசின் நிலைப்பாடு முக்கியமானதாக மாறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+