இண்டிகோ விமான சேவை ரத்து: ஏர்போர்ட்டில் சிக்கி தவிக்கும் மணமகன்.. வைரலாகும் வீடியோ!!

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையில் 60% பங்களிப்பை கொண்டுள்ளது இண்டிகோ நிறுவனம். இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் கடந்த 2ஆம் தேதி முதல் பாதிக்கப்பட்டுள்ளன. விமானிகள் பணி நேர கட்டுப்பாடு குறித்த ஒழுங்குமுறையை நடைமுறைப்படுத்துவதில் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

பயணிகள் மற்றும் விமான பயணங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விமானிகளுக்கான வாராந்திர விடுப்பு நேரத்தை அதிகப்படுத்தியது. இந்தியாவில் இண்டிகோ நிறுவனம் அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குகிறது. எனவே இந்த புதிய விதிகளுக்கு ஏற்ப இண்டிகோ நிறுவனம் கூடுதலாக விமானிகளையும் விமான பணியாளர்களையும் நியமிக்க தவறிவிட்டது.

இண்டிகோ விமான சேவை ரத்து: ஏர்போர்ட்டில் சிக்கி தவிக்கும் மணமகன்.. வைரலாகும் வீடியோ!!

கடந்த இரண்டாம் தேதி முதல் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி, சென்னை, மும்பை என நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மருத்துவ தேவைகள் ,தொழில் ரீதியாக செல்ல வேண்டியவர்கள் , திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் என ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக டிக்கெட் புக் செய்தவர்கள் எல்லாம் தற்போது என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். விமான நிலையம் வந்த பிறகு விமானம் தாமதம் என அறிவிக்கப்பட்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையும் அவர்களின் கதைகளும் நம்மை கலங்கடிக்க வைக்கின்றன .

சமூக வலைதளங்களில் தற்போது இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்த செய்திகள் தான் டிரெண்டிங் ஆன விஷயமாக இருந்து வருகிறது. பலரும் இண்டிகோ விமான நிறுவனம் வெறும் மன்னிப்பு எனக் கூறிவிட்டால் இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்துவிட முடியுமா என கேள்வி எழுப்பு வருகின்றனர். இந்த சூழலில் ஸ்கைரீல்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நபர் இண்டிகா விமான சேவை ரத்தானதால் ஒரு மணமகன் தன்னுடைய திருமண நிகழ்வுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன கவுண்ட்டரில் பயணிகள் தங்கள் விமானத்தின் நிலவரம் குறித்து விசாரித்து வருகின்றனர் . அதில் ஒரு நபர் எனக்கு திருமணம் நான் என்னுடைய திருமணத்திற்கு செல்ல வேண்டும் நான் தான் மணமகன் என்னுடைய திருமணத்தையே நான் தவற விட்டுவிடுவேன் போல் இருக்கிறது என கூறுகிறார். போனில் தன் திருமண பத்திரிக்கையையும் காட்டுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பலரும் அந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் அவருடைய வழியை பார்த்தால் கவலையாக இருக்கிறது என கூறியிருக்கின்றனர். ஒரு சிலர் இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் கோபம் கொள்ளாமல் கத்தாமல் மெச்சூரிட்டியுடன் இந்த பிரச்சினையை கவனமாக கையாளுகிறார் அவர் மனைவி கொடுத்து வைத்தவர் என பாராட்டிருக்கின்றனர். ஒரு நபர் அவர் அவர் கண்ணில் எவ்வளவு வலி தெரிகிறது என வருத்தம் தெரிவித்துள்ளனர். இதே போல இரு தினங்களுக்கு முன்னர் புதிதாக திருமணமான தம்பதி திருமண வரவேற்புக்கு செல்ல முடியாமல் ஏர் போர்ட்டில் சிக்கி கொண்டனர். பின்னர் வீடியோ காலில் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+