ஹரியானாவை அடிப்படையாகக் கொண்ட இண்டிகோ நிறுவனம், மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு விமான சேவையை வழங்கி வரும் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் கட்டணத்தை ஜனவரி 31க்குள் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு சந்தை மதிப்பில் அக்டோபர் 2019ன் படி, 47.7% பங்குகளை வகித்து வரும் இண்டிகோ நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் ஒரு மிகப்பெரிய விமான நிறுவனமாகும்.
கடந்த 2018 - 2019ம் நிதியாண்டின் படி, 64 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த நிலையில் இந்த நிறுவனம் மொத்தம் 83 இடங்களுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இதில் 60 உள்நாட்டு விமான சேவையையும், 23 சர்வதேச விமான தளங்களுக்கும் வழங்கி வருகிறது.
கிரெடிட் ஷெல்லில் இருப்பு
கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தருமாறு கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தான் முடித்து வைத்தது. அதன் படி ரத்தான டிக்கெட்டுக்கு பதிலாக 2021 மார்ச் வரை, கிரெடிட் ஹெல்களை பயன்படுத்தி, அதில் பதிவு செய்யப்பட்ட விமான பயணிகளின் கட்டணத்தை இருப்பு வைக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது.
கட்டணத்தை கட்டாயம் தர வேண்டும்
அதோடு அடுத்த ஆண்டு மார்ச் வரையில் சம்பந்தப்பட்ட பயணிகள் பயணிக்க விமான நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு வேளை அந்த காலத்திற்குள் பயணிகள் விமானத்தில் பயணிக்காவிட்டால், கட்டணம் கட்டாயமாக பயணிகளுக்கு திரும்ப தர வேண்டும் எனவும் அப்போது தீர்ப்பு வழங்கியது. இவ்வாறு மார்ச் 31, 2021 தேதிக்கு பிறகு பயணிகள் பயன்படுத்தாமல் வழங்கப்படும் தொகைக்கு 0.75% இன்செண்டிவ் உண்டு எனவும் அப்போது உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
யார் யார் தகுதியுடையவர்கள்
இந்த தீர்ப்பானது உள்நாட்டு விமான டிக்கெட்டுகளாக இருந்தாலும், வெளிநாடுகளுக்கு செல்ல பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளாக இருந்தாலும் பொருந்தும் எனவும் கூறப்பட்டது. லாக்டவுனுக்கு முன்பாக, லாக்டவுனின் போது பயணிப்பதற்காக பதிவு செய்யப்பட்ட, முன்பதிவுகளுக்கும் ஷெல் திட்டத்தின் மூலம் பணத்தினை பெற தகுதியுடையவர்கள் என்றும் தெரிவித்திருந்தது.
ரீபண்ட் எவ்வளவு?
இதற்கிடையில் இண்டிகோ இந்த டிக்கெட் ரீபண்ட் மூலம் ஏற்கனவே 1000 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையில் 90% ஆகும்.
கொரோனா காரணமாக வருவாய் இழப்பினை சந்தித்த நிலையிலும் பயணிகளை தக்கவைத்துக் கொள்ள இண்டிகோ நிறுவனம் ரீபண்டுகளை வழங்கி வருகின்றது


Click it and Unblock the Notifications