இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?

விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ டிசம்பர் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் பல மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்பும், ஆகாச ஏர்லையன்ஸ் தனது சேவையை அளிக்கத் துவங்கிய பின்பு இண்டிகோ சில தடுமாற்றங்களையும் பாதிப்புகளையும் எதிர்கொண்டு வந்தாலும், டிசம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து அதிகப்படியான லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் இண்டிகோ நிறுவனத்தின் லாபம் 1000 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இண்டிகோ

இண்டிகோ

இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமாகத் திகழும் இண்டிகோ டிசம்பர் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் பல மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இக்காலாண்டில் இண்டிகோ 1,422 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

லாபம்

லாபம்

இண்டிகோ நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 129 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இக்காலாண்டில் 1000 சதவீதம் அதாவது 10 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

 ஆப்ரேஷன் வருவாய்

ஆப்ரேஷன் வருவாய்

இண்டிகோ நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் மூலம் வருவாய் டிசம்பர் காலாண்டில் 61% அதிகரித்து 14,932 கோடி ரூபாயாக இருந்தது. இது டிசம்பர் 2021 காலாண்டில் 9294 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

லோ பேஸ் எபக்ட்

லோ பேஸ் எபக்ட்

கொரோனா காலத்தில் இண்டிகோ நிறுவனத்தின் வர்த்தகம் அடிமட்டத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது லோ பேஸ் எபக்ட் வாயிலாகத் தற்போது 1000 சதவீத லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால் 2022 செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் இண்டிகோ நிறுவனம் 1,583 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

டிசம்பர் காலாண்டில் இண்டிகோ நிறுவனத்தின் பயணிகளின் டிக்கெட் விற்பனை மூலமாகச் சுமார் 13,162 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 63 சதவீதம் அதிகமாகும். மேலும் பிற பிரிவுகள் வாயிலாக வருவாய் கடந்த ஆண்டை விடவும் 25% அதிகரித்து ரூ.1,422 கோடியாக இருந்தது.

EBITDAR அளவு

EBITDAR அளவு

இண்டிகோ வெளிநாடுகளுக்கு அதிகளவிலான சேவை அளித்தாலும், உள்நாட்டு சேவையில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் EBITDAR அளவு டிசம்பர் காலாண்டில் 70 சதவீதம் அதிகரித்து 3,399 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,995 கோடியாக இருந்தது.

எரிபொருள் செலவுகள்

எரிபொருள் செலவுகள்

டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் எரிபொருள் செலவுகள் கடந்த ஆண்டை காட்டிலும் 77 சதவீதம் உயர்ந்து 5,785 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இண்டிகோவின் மொத்த பண இருப்பு 21,924 கோடி ரூபாயாக உள்ளது, இதில் 10,612 கோடி ரூபாய் Free Cash, 11,312 கோடி ரூபாய்க் கட்டுப்படுத்தப்பட்ட பணமாகவும் உள்ளது.

302 விமானங்கள்

302 விமானங்கள்

டிசம்பர் காலாண்டு முடிவில் இண்டிகோ நிறுவனத்திடம் 23 A320 CEO விமானங்கள், 160 A320 NEO விமானங்கள், 78 A321 NEO விமானங்கள், 39 ATR விமானங்கள் மற்றும் 2 A321 சரக்கு விமானங்கள் உட்பட 302 விமானங்களைக் கொண்ட விமான நிறுவனமாக உள்ளது. டிசம்பர் காலாண்டில் 22 பயணிகள் மற்றும் 1 சரக்கு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+