இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ வியாழக்கிழமை அன்று ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF) விலைகள் அதிகரித்து வருவதால் அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையில் ரூ.300 முதல் ரூ.1000 வரை எரிபொருள் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இப்புதிய கட்டணம் அக்டோபர் 6 முதல் அமலுக்கு வருகிறது.
ATF எரிபொருள் விலை உயர்வின் காரணமாக மட்டுமே இந்த fuel charges என்ற புதிய கட்டணத்தை விதிக்கப்பட்டு உள்ளது என்று கூறும் இண்டிகோ தொடர்ச்சியாக கடந்த மூன்று மாதங்களில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

ஒரு விமான நிறுவனத்தின் இயக்கச் செலவில் ATF எரிபொருள் முக்கிய செலவுகளாக உள்ளது, இந்த திடீர் விலை உயர்வை சமாளிக்க இண்டிகோ பயண தூரத்தின் அடிப்படையில் கட்டணத்தை விதிக்க உள்ளது. உதாரணமாக 500 கிமீ தூரத்திற்கு எரிபொருள் கட்டணமாக ரூ.300 விதிக்கப்பட உள்ளது. இந்த கட்டணம் 1000 ரூபாய் வரையில் அதிகரிக்கிறது.
விமான பயண தூரத்தின் அடிப்படையில் 500 கிலோமீட்டர் பயணத்திற்கு 300 ரூபாயும், 501 முதல் 100 கிலோமீட்டர் பயணத்திற்கு 400 ரூபாயும், 1001 முதல் 1500 கிலோமீட்டர் பயணத்திற்கு 550 ரூபாயும், 1501 முதல் 2500 கிலோமீட்டர் பயணத்திற்கு 650 ரூபாயும், 2501 - 3500 கிலோமீட்டர் பயணத்திற்கு 800 ரூபாயும், 3501 கிலோமீட்டருக்கு மேல் பயணத்திற்கு 1000 ரூபாயை கட்டணமாக விதிக்கப்படுகிறது.

இந்திய விமான நிறுவனங்கள் இதுப்போன்ற கட்டணத்தை விதிப்பது இது முதல் முறையல்ல, 2018 எரிபொருள் விலை அதிகமான போது இதேபோன்ற fuel charges-ஐ விமான பயணிகள் தலையில் கட்டியது. இத்தகைய கட்டணங்கள் மூலம் விமான டிக்கெட் விலை அதிகரிக்கும், இது இத்துறை வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றால் மிகையில்லை.
மத்திய அரசு இந்த மாத துவக்கத்தில் விமான எரிபொருள் மீதான விலையை 14 சதவீதம் அதிகரித்தது. இது 3 மாதங்களாக தொடரும் காரணத்தால் விமான நிறுவனங்கள் இக்கட்டணத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதம் ATF விலை 8.5 சதவீதமும், ஜூலை மாதம் 1.65 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இந்த கட்டணம் சரியாக பண்டிகை காலத்தில் வந்துள்ள காரணத்தால் முக்கியமான நாட்களில் சொந்த ஊருக்கு செல்வோர் அனைவருக்கும் பெரும் பாதிப்பாக இருக்கும். இண்டிகோ இந்திய விமான போக்குவரத்து சந்தையில் சுமார் 60 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இண்டிகோ 3090 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications