இண்டிகோ விமான நிறுவனம் போர் அச்சத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநகர், அமிர்தசரஸ், சண்டிகர், லே, மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட பகுதிகளுக்கு மே 14, 2025 முதல் விமான சேவைகளை படிப்படியாக மீண்டும் தொடங்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்ததுள்ளது. இதனால் விமான டிக்கெட் புக் செய்தவர்களுக்கும், இப்பகுதிக்கு விமான மூலம் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கும் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இந்த ஆறு விமான நிலையங்கள், திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் விமான சேவைகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து இண்டிகோ விமான நிறுவனம் செவ்வாய்க்கிழமை மீண்டும் தனது சேவையை துவங்குவதாக அறிவித்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் தனது X பதிவில், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர், மற்றும் ராஜ்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு மே 14 முதல் தனது சேவைகளை மீண்டும் தொடங்குகிறது. ஒவ்வொரு விமானமும் துல்லியமான ஒருங்கிணைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படுகிறது, இதனால் ஒவ்வொரு பயணமும் தடையின்றி, பாதுகாப்பாக, மற்றும் சரியான நேரத்தில் இயங்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் விமான பயணிகள், தங்கள் பயணங்களுக்கு முன்பு இண்டிகோவின் இணையதளம் (www.goindigo.in) அல்லது மொபைல் ஆப் மூலம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அடுத்தடுத்த முக்கிய அப்டேட்களை இண்டிகோவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இண்டிகோ விமான பயணிகள் தொடர்ந்து இண்டிகோ எக்ஸ் கணக்கை கண்காணிப்பது அவசியமாகியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலின் காரணமாக பயணிகளின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு, இண்டிகோ மே 13, 2025 அன்று ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர், மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்கு அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக திங்கள்கிழமை இரவு 11:38 மணிக்கு X இல் பதிவிட்டது.
மேலும் திங்கள்கிழமை மாலை, டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி பயணித்த இண்டிகோ விமானம் (6E2045), அமிர்தசரஸில் முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்ட மின்தடை நடவடிக்கைகள் காரணமாக திரும்பியது குறிப்பிடத்தக்கது. Flightradar24.com இணையதளத்தின்படி, இந்த விமானம் சிறிது நேரம் வானில் பிறந்த பின்னர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டது என தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநகர், அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஜம்மு, மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்கு இண்டிகோ விமான சேவைகள் மே 13 அன்று பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட விமானங்களைத் தொடர்ந்து, மே 14, 2025 முதல் படிப்படியாக மீண்டும் தொடங்குகின்றன.


Click it and Unblock the Notifications