இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பயணிக்க திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் மிகப்பெரிய தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. ஆம், உள்நாட்டிலும், வெளிநாட்டிற்கும் பயணிக்க திட்டமிடும் மக்களுக்கு இந்த தள்ளுபடி விற்பனை மிகப்பெரிய அளவில் பயனளிக்கும், இதேபோல் பணத்தை சேமிக்க உதவும்.
நீங்கள் 2026ஆம் ஆண்டு துவக்கத்தில் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டு இருந்தால் இண்டிகோவின் 'கிராண்ட் ரன்அவே ஃபெஸ்ட்' சலுகை திட்டத்தை மிஸ் செய்துவிடாதீர்கள். இந்தியா முழுவதும் ஆன்லைன் நிறுவனங்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடி உடன் மெகா அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதேபோல் இண்டிகோவும் இந்த விழாக்காலத்தை மையமாக வைத்து தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இண்டிகோ விமான சேவை நிறுவனம் செப்டம்பர் 15 முதல் 21, 2025 வரை ஒரு வார கால 'கிராண்ட் ரன்அவே ஃபெஸ்ட்' விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், உள்நாட்டு ஒரு வழி பயணங்களுக்கு ரூ.1,299 முதல் மற்றும் சர்வதேச பயணங்களுக்கு ரூ.4,599 முதல் அனைத்தும் உள்ளடக்கிய கட்டணங்களில் டிக்கெட்-ஐ புக் செய்ய முடியும்.
இண்டிகோவின் இந்த 'கிராண்ட் ரன்அவே ஃபெஸ்ட்' விற்பனை, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 7 முதல் மார்ச் 31 வரை பயணிக்க உள்ளவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த தள்ளுபடி விற்பனையில் இண்டிகோவின் இண்டிகோஸ்ட்ரெட்ச் (IndiGoStretch) என்ற பிஸ்னஸ் சேவை, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு வழித்தடங்களில் ரூ.9,999 முதல் கிடைக்கும் எனவும் இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த கட்டணங்கள், பயணிகளுக்கு மலிவு விலையில் பயணிக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது, குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில்.
இந்த சலுகையின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் எளிதாக வடிவமைத்துள்ளது இண்டிகோ. பயணிகள் இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.goindigo.in, மொபைல் செயலி, இண்டிகோவின் செயற்கை நுண்ணறிவு உதவியாளரான 6Eskai, அல்லது வாட்ஸ்அப் மூலம் (+91 70651 45858) முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.

இண்டிகோவின் ப்ளூசிப் (IndiGo BluChip) உறுப்பினர்களுக்கு, இந்த விற்பனையின் கீழ் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன. இப்பிரிவு வாடிக்கையாளர்களுக்கு இண்டிகோ இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் IBC10 என்ற விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யும் போது, கட்டணத்தில் 10 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதோடு பேகேஜ், சீட் தேர்வு, உணவு என பலவற்றிலும் சேவைகளை அளிக்க தயாராகியுள்ளது இண்டிகோ. இந்திய விமான போக்குவரத்து சந்தையில் முதல் இடத்தில் இருந்தாலும் போட்டி அதிகமாக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து வர்த்தகத்தையும், வருவாயும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இண்டிகோ.
இதற்காகவே பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு இந்த 'கிராண்ட் ரன்அவே ஃபெஸ்ட்' தள்ளுபடி விற்பனையை விழாக்காலத்தை மையமாக வைத்து அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications