மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமுமான இண்டிகோ, 877 ரூபாய் முதல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய சலுகையை கடந்த வாரம் அறிவித்தது.
கடந்த ஜனவரி 13ம் தேதியன்று தொடங்கிய இந்த சலுகையானது, ஜனவரி 17 கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை விற்பனையின் மூலம் இண்டிகோவின் விமானத்தில் ஏப்ரல் 1, 2021 முதல் செப்டம்பர் 30, 2021 வரை பயணித்துக் கொள்ளலாம் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த சேவையை தற்போது ஜனவரி 22 வரை நீட்டித்துள்ளது இண்டிகோ நிறுவனம்.
இண்டிகோவின் சலுகை
The big fat indigo sale என்ற பெயரில் இந்த சலுகையை தொடங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை இண்டிகோ நிறுவனம் கடந்த வாரமே தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. இண்டிகோவின் இந்த சலுகைகள் உண்மையில் குறைந்த விமானத்தில் பயணிக்க ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்பட்டாலும், இந்த சலுகையை பயன்படுத்தி பயணம் செய்ய பதிவு செய்பவர்கள், ஒரு வேளை டிக்கெட்டினை ரத்து செய்தால், ரத்து கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் கூறியது. அதோடு இந்த சலுகையானது ஒரு சில வழிதடங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணத்தில் இதெல்லாம் சேர்க்கலாம்
மேலும் இந்த சலுகையானது டிக்கெட் இருப்பினை பொருத்தே வழங்கப்படும். எனினும் இந்த திட்டத்தில் மொத்தமாக டிக்கெட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதோடு மேற்கண்ட இந்த சலுகை கட்டணத்தில் விமான நிலைய கட்டணம் மற்றும் மாநில அரசு வரி சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கேஷ்பேக் சலுகையும் உண்டு
குறிப்பாக ஹெச்எஸ்பிசி மற்றும் இந்தஸிந்த் வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலம், டிக்கெட் பதிவு செய்யப்பட்டால் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. இதில் ஹெச்எஸ்பிசி கிரெடிட் கார்டினை பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்தால் 5 சதவீதம் கேஷ்பேக்கினை பெற முடியும். இதே இந்தஸிந்த் வங்கிகளின் கிரெடிட் கார்டினை பதிவு செய்தால் 12 சதவீத கேஷ்பேக் சலுகையினையும் பெற முடியும். ஆனால் இந்த சலுகையை பெறவும் சில விதிமுறைகள் உண்டு.
ஸ்பைஸ்ஜெட் சலுகைகள்
இதே ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் 899 ரூபாய் முதல் டிக்கெட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகை மூலம் ஏப்ரல் 1, 2021 முதல் செப்டம்பர் 30, 2021 வரை பயணித்துக் கொள்ளலாம். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் Book Befikar Sale என்ற பெயரில் இந்த சலுகையை தொடங்கியது. இது தொடர்பான அறிவிப்பினை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இண்டிகோவினை போலவே இந்த சலுகைகள் வழங்கப்பட்டாலும், ஸ்பைஸ்ஜெட்டில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டால் கட்டணம் இல்லை. டிக்கெட்டினை ரத்து செய்தால் பூஜ்ஜிய கட்டணமாகும்.
சூப்பர் சலுகை தான்
இந்த சலுகையில் சில பல விதிமுறைகள் கடுமையாக இருந்தாலும், இந்த சலுகையானது ரயில் கட்டணங்களை விட மலிவான விலையில் இருப்பதால் அடித்தட்டு ,மக்களும் விமானத்தில் பயணிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு கொரோனா காலகட்டத்தில் முடங்கி போன சேவையை மீட்டெடுக்க, இது இந்த நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் அமையும்.
வாங்க ஜாலியா ஒரு ரெய்டு தான் போய்ட்டு வருவோமே..!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications