இந்தியாவின் முன்னணி 4 சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான மகேந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட் சமீபத்தில் தனது புதிய மின்சார வாகனமான "BE 6E" என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்த புதிய வாகனத்தின் பெயரில் உள்ள 6E என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு எதிராக இண்டிகோ விமான நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் சமீபத்தில் வெளியான புதிய மின்சார வாகனத்தில் "6E" என்று தங்களது வர்த்தக முத்திரையை பயன்படுத்தியதாக கூறி மகேந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இண்டிகோ நிறுவனம் தங்களின் சில சேவைகளுக்கு "6E" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இதை நிறுவனத்தின் பெயருடன் இணைத்து பிற சேவைகளுக்கும் இண்டிகோ பயன்படுத்துகிறது. 2015-ஆம் ஆண்டு முதல் "6E லிங்க்" என்ற வர்த்தக முத்திரையை இண்டிகோ நிறுவனம் பதிவு செய்து தனது பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறது.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமையன்று நீதிபதி அமித் பன்சால் முன்பு விசாரணைக்கு வந்தது ஆனால் அன்றைய தினம் எந்த தீர்ப்பும் வழங்கப்படவில்லை. விசாரணை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடந்த விஷயம் குறித்து விவாதிக்க மகேந்திரா நிறுவனம், இண்டிகோ நிறுவனத்தை தொடர்பு கொண்டதாக இண்டிகோ நிறுவன தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திப் சேத்தி கூறியுள்ளார்.
மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமான மகேந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட், இண்டிகோ விமான நிறுவனம் தாக்கல் செய்த வழக்குக்கு பதில் அளித்து தனது தரப்பு நியாயத்தை விவரித்தது. "6E" என்பது கிளாஸ் 12-இன் கீழ் வாகன வகுப்பை குறிக்கிறது. இண்டிகோ நிறுவனத்தின் வர்த்தக முத்திரையை இது குறிக்கவில்லை என்று தெரிவித்தது.
மகேந்திரா எலக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு மோட்டார் வாகனங்களை உள்ளடக்கிய கிளாஸ் 12-இன் கீழ் BE 6E என்ற வர்த்தக முத்திரைக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது. "எங்களுடைய நோக்கம் நிறுவனத்தின் நற்பெயரை மீறுவதில்லை. எந்த ஒரு மீறலையும் நாங்கள் செய்யவில்லை. அதேபோல இண்டிகோவின் கவலைகளையும் நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். இந்த விவாகரத்தை சுமூகமாக தீர்க்க இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்", என்று மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications