இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் மேகியை விட அதிக சோடியம் இருப்பதாக இன்புளுயன்சர் ஒருவர் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
உணவுப் பொருள் தொடர்பான ஆய்வாளர் ரேவந்த் ஹிமாத்சின்ஹா, இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் உள்ள உப்பின் அளவை ஆய்வு செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பல்வேறு இடங்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை ருசித்து அந்த உணவுப் பொருட்களை மதிப்பாய்வு செய்து வீடியோ வெளியிடுபவர் ரேவந்த் ஹிமாத்சின்ஹா. இவர் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் போர்ன்விடாவில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்து மதிப்பாய்வு செய்தார்.
இதனை அடுத்து அந்த நிறுவனத்திடம் சர்க்கரையின் அளவை குறைக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வு இணையதளத்தில் பெருமளவில் வைரலானது. இந்த நிலையில் அவர் தற்போது இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவை மதிப்பாய்வு செய்துள்ளார்.
இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உப்புமா, அவல் போகா, தால் உள்ளிட்ட உணவுகளை ஆய்வு செய்ததில் அதிக உப்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். மேகி தான் அதிக சோடியம் நிறைந்த உணவு என்பது நம்மில் பலருக்கு தெரியும்.

ஆனால் இண்டிகோவில் வழங்கப்படும் உப்புமாவில் மேகியை விட 50 % உப்பு அதிகமாக உள்ளது, அவலில் மேகியை விட 83 % உப்பு அதிகமாக உள்ளது என்றும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதே போல தாலில் கூட அதிக உப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என அவர் தன்னுடைய வீடியோ பதிவில் கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இண்டிகோவில் பயணம் செய்பவர்கள் வீட்டிலேயே உணவை சமைத்து பேக் செய்து கொண்டு செல்லலாம் அல்லது அதற்கு பதிலாக பாதாம் உள்ளிட்ட நட்ஸ்களை வாங்கி உண்ணலாம் என பரிந்துரை செய்துள்ளார்.
விமானத்தில் பயணம் செய்யும் போது நமக்கு அதிகப்படியான உப்பு இருப்பது ஏன் என்று தெரிவதில்லை என்றால், உயரத்தில் பறக்கும் போது நம்முடைய நாக்கில் ருசி உணர்வு குறைவாக இருக்கும் என்றும் இதன் காரணமாகவே விமான நிறுவனங்கள் உணவில் அதிக உப்பினை போடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரேவந்த் ஹிமாத்சின்ஹாவின் இந்த வீடியோவுக்கு இண்டிகோ நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. அதில் இண்டிகோ நிறுவனம் எப்பொழுதும் பிரஷ்ஷான உணவினையே பயணிகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
FSSAI விதிகளின் படியே தங்களது உணவுகளில் பொருட்கள் சேர்க்கப்படுவதாக கூறியுள்ளது. அனைவரது கருத்துகளையும் பெற்று அதன் அடிப்படையில் எங்கள் சேவைகளை மேம்படுத்துவதையே நாங்கள் விரும்புகிறோம் என்றும் இண்டிகோ நிறுவனம் தங்களது அறிக்கையில் விளக்கம் தந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications