வருடா வருடம் காதலர்கள் எதிர்பார்க்கும் ஒரு தினம் என்றால் அது காதலர் தினம் தான். அன்றைய தினம் காதலர்கள் இணைந்து பரிசுகளைப் பரிமாறிக் கொள்வது, வெளியூர்களுக்கு செல்வது என அந்த நாளை சிறப்பாக்கும் பல்வேறு விஷயங்களை செய்து மகிழ்வர். இந்நிலையில் பலரும் தங்கள் துணையோடு வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டு கொண்டிருப்பீர்கள். அதற்கு ஏதுவாக இண்டிகோ நிறுவனம், காதலர் தினத்தை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதில் தம்பதிகள் இருவரும் சேர்ந்து பயணிக்கும் போது சிறப்பு சலுகைகளைப் பெற முடியும். இரண்டு பயணிகளுக்கு முன்பதிவு செய்யும்போது அடிப்படைக் கட்டணத்தில் 50% வரை தள்ளுபடி வழங்கப்படவுள்ளதாக விமான நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பிப்ரவரி 12, 2025 முதல் பிப்ரவரி 16, 2025 வரை வழங்கப்படவுள்ளது.

பிப்ரவரி 12-ஆம் தேதி அன்று 1 மணி நேரமும், பிப்ரவரி 16-ஆம் தேதி என்று 23 மணி நேரம் 59 நிமிடங்கள் வரை இந்த சலுகையை பயன்படுத்தி விமான டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழிதடங்களுக்கான சலுகைகளும் அடங்கும். பயணத் தேதி, டிக்கெட் முன்பதிவு செய்த தேதியிலிருந்து குறைந்தது 15 நாட்களுக்கு பிறகு இருக்க வேண்டும்.
இண்டிகோ நிறுவனத்தின் இணையதளம், மொபைல் அப்ளிகேஷன், இண்டிகோ 6E ஸ்காய் உள்ளிட்ட பல முன்பதிவு சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த தள்ளுபடிகளைப் பெறலாம். இண்டிகோ நிறுவனம் விமானக் கட்டணச் சலுகைகளுடன், பயணச் சலுகைகள் பலவற்றிலும் சேமிப்பை வழங்குகிறது. பயணிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் குறிப்பிட்ட வழித்தடங்களில் முன்கூட்டியே செலுத்திய லக்கேஜ் கட்டணங்களுக்கு 15% வரை தள்ளுபடி பெறலாம். மேலும் ஸ்டாண்டர்ட் சீட் செலக்சனுக்கு 15% தள்ளுபடி கிடைக்கும்.
விமான நிறுவனம் முன்பதிவு செய்த உணவு ஆர்டர்களில் 10% தள்ளுபடியை வழங்குகிறது. இது பயணிகளுக்கு விமானத்தில் சாப்பிடுவதை மிகவும் மலிவு விலையில் வழங்குகிறது. 6E பிரைம் மற்றும் 6E சீட் & ஈட் போன்ற இண்டிகோவின் பிற சேவைகளில் 15% வரை கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
கூடுதலாக, இண்டிகோ நிறுவனம் பிப்ரவரி 14, 2025 அன்று ஃபிளாஷ் சேலை நடத்தவுள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் செய்யப்படும் முதல் 500 டிக்கெட் முன்பதிவுகளுக்கு விற்பனை கட்டணத்தில் கூடுதலாக 10% தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. இந்தச் சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களுக்குப் பொருந்தும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications