அயோத்தி வால்மீகி விமான நிலையத்திற்கு வந்த முதல் விமானம்.. பைலட் செய்ததை பாத்தீங்களா..!!

புனித நகரமான அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததில் இருந்து அங்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. டெல்லியில் இருந்து அயோத்திக்கு முதல் விமான சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

திறப்புவிழா முடிந்தவுடனேயே டெல்லியிலிருந்து அயோத்திக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானத்தின் கேப்டன் ஆஷுதோஷ் சேகர், பணிகளை வரவேற்றுக் கூறுகையில், அயோத்திக்குச் செல்லும் இந்த விமானத்தை கட்டுபடுத்தும் பொறுப்பு தனக்குக் கிடைத்ததில் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார்.

அயோத்தி வால்மீகி விமான நிலையத்திற்கு வந்த முதல் விமானம்.. பைலட் செய்ததை பாத்தீங்களா..!!

மேலும், இண்டிகோ நிறுவனம் இந்த முக்கியத்துவம் பெற்ற சேவையை அளித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது இண்டிகோவுக்கும் எங்களுக்கும் சந்தோஷமாக உள்ளது. உங்களது பயணம் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் இருக்கும் என நம்புகிறேன் என்று பயணிகளிடம் சேகர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் ஆஷுதோஷ் சேகர் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டார். இதன்பின் பயணிகளும் அதேபோல் கோஷமிட்டனர். ஆஞ்சநேயர் மந்திரங்களும் பயணிகளால் ஜெபிக்கப்பட்டன.

அயோத்தி வால்மீகி விமான நிலையத்திற்கு வந்த முதல் விமானம்.. பைலட் செய்ததை பாத்தீங்களா..!!

இண்டிகோவின் இந்த முதல் விமானத்தில் பயணம் செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அயோத்தியை தரிசனம் செய்யப் போவதில் நாங்கள் பரவசம் அடைந்துள்ளோம். எங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து வந்துள்ளோம். ராம் லல்லாவை தரிசித்து அவரது ஆசிர்வாதங்களைப் பெறுவோம் என்றார்.

மற்றொரு பயணி கூறுகையில், எங்கள் வாழ்வில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். ராமர் பிறந்த பூமியில் இந்த விமானநிலையம் அமைந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

முன்னதாக மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தைத் தொடங்கி வைக்க அயோத்தி வந்திருந்த பிரதமர் மோடிக்கு பெருத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரூ.1450 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையத்தின் டெர்மினல் 6500 சதுரஅடி பரப்பளவை கொண்டுள்ளது. வருடத்துக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமானநிலையத்தின் அமைப்பு கோயில் கட்டடக்கலையைச் சார்ந்துள்ளது. உட்புறங்களில் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை தொடர்பான சித்திரங்களும் முரல் ஓவியங்களும் அலங்கரிக்கின்றன.

இந்த விமான நிலையத்தின் மூலம் பிராந்திய இணைப்புக்கும், சுற்றுலாவைப் பெருக்குவதற்கும், வணிக வர்த்தகத்தை அதிகரிக்கவும் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. நிறைய பேருக்கு வேலைவாய்ப்பையும் அளித்துள்ளது. இரண்டாவது கட்டமாக அயோத்தி விமானநிலையத்தை விரிவுப்படுத்தி ரன்வே தூரத்தை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தி நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் விமான நிலையம் அமைந்துள்ளது. முதற்கட்டமாக நவீன வசதிகளைச் செய்வதற்காக ரூ.1450 கோடி செலவிடப்பட்டது. விமான நிலையத்தைத் தொடங்கி வைத்தபின்னர் அயோத்தியில் புதிய சீரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ஜனவரி 15 முதல் அயோத்திக்கு மும்பையிலிருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இண்டிகோ அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அயோத்திக்கு பெங்களூரு, கொல்கத்தா, சென்னையிலிருந்து நேரடி விமான சேவைகளைத் தொடங்கிவிட்டது.

அத்துடன் விரைவில் நாட்டின் பிற பகுதிகளையும் அயோத்தியை இணைக்கும் வகையில் கூடுதலாக விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான டிக்கெட் புக்கிங் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+