நாட்டின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்று இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ). இந்நிறுவனம் தனது இயக்குனர்கள் குழுவின் தலைவராக விக்ரம் சிங் மேத்தாவை நியமனம் செய்துள்ளது. இண்டிகோ நிறுவன இயக்குனர்கள் குழுவின் தற்போதைய தலைவர் வெங்கடரமணி சுமந்திரனுக்கு பிறகு விக்ரம் சிங் மேத்தா பொறுப்பேற்கிறார்.
வெங்கடரமணி சுமந்திரன்
இண்டிகோ நிறுவன இயக்குனர்கள் குழுவின் உறுப்பினராக ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும் வெங்கடரமணி சுமந்திரன் விமான நிறுவத்திலிருந்து வெளியேறியுள்ளார். இவரது தலைமையின் கீழ், இண்டிகோ நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது மற்றும் அதன் சந்தை நிலையை வலுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வெங்கடரமணி சுமிந்திரன் வெளியேறுவதால் இயக்குனர்களின் குழுவின் புதிய தலைவராக விக்ரம் சிங் மேத்தாவை இண்டிகோ நிறுவனம் நியமித்துள்ளது. 2022ம் ஆண்டு முதல் இண்டிகோவின் இயக்குனர்கள் குழுவின் உறுப்பினராக விக்ரம் சிங் மேத்தா உள்ளார்.

விக்ரம் சிங் மேத்தா டெல்லி பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றவர். மேலும், ஆஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் எரிசக்தி பொருளாதாரம் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டங்களை பெற்றவர். 1978ல் இந்தியா நிர்வாக சேவைகள் (ஐஏஎஸ்) அதிகாரியாக விக்ரம் சிங் மேத்தா தனது தொழில்முறை பயணத்தை தொடங்கினார். ஆனால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்த பணியில் இருந்தார்.
ஷெல் நிறுவனம்
பின்பு பெறுநிறுவன துறையில் நுழைந்தார். விக்ரம் சிங் மேத்தா, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் தலைவராக உள்ளார். ப்ரூக்கிங்ஸ் இந்தியாவின் முன்னாள் நிர்வாக தலைவர் அந்நிறுவனத்தின் மூத்த உறுப்பினர் ஆவார். மேலும் இந்தியாவில் ஷெல் குழும நிறுவனங்களின் தலைவராகவும். எகிப்தில் உள்ள ஷெல் மார்க்கெட்ஸ் மற்றும் ஷெல் கெமிக்கல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்.
விக்ரம் சிங் மேத்தா முன்பு கோல்கேட் பால்மோலிவ் (இந்தியா) லிமிடெட், மகிந்திரா அண்டு மகிந்திரா லிமிடெட் மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ லிமிடெட் ஆகியவற்றின் இயக்குனர்கள் குழுவில் பணியாற்றியுள்ளார். 2010ம் ஆண்டில் ஆசியா ஹவுஸால் ஆண்டு சிறந்த தொழிலதிபர் என்று அங்கீகரிக்கப்பட்டார். மேலும் 2016ம் ஆண்டில் ஆசியா கார்ப்பரேட் கவர்னன்ஸ் அண்ட் சஸ்டைனபிலிட்டி மையத்தால் இந்தியாவில் சிறந்த சுயாதீன இயக்குனர் என்று கவுரவிக்கப்பட்டார்.
பங்கு விலை
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இண்டிகோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.30 சதவீதம் உயர்ந்து ரூ.5,340.90 வரை உயர்ந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications