பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அமெரிக்கா- சீனா மத்தியிலான வர்த்தகப் பிரச்சனை வெடிக்கத் துவங்கிய பின்னர்ச் சீனா அரசு அமெரிக்கா நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்ட பின்பு செமிகண்டக்டர் துறையில் புதிய முதலீடுகளையும், வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஆனால் 48 வருடத்திற்கு முன்பே மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு உலகிலேயே மிகப்பெரிய செமிகண்டக்டர் சக்தியாக உருவெடுக்கும் திட்டத்தை 1976 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த மாபெரும் திட்டத்தைப் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவை இந்தியாவில் செமிகண்டக்டர் டிசைன் மற்றும் உற்பத்திக்காக Semiconductor Complex Limited என்ற அரசு நிறுவனத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் அறிவிக்கும் போது தற்போது Semiconductor powerhouse ஆக இருக்கும் தைவான், இஸ்ரேல், கொரியா, சீனா ஆகியவை களத்திலேயே இல்லாத போது எடுக்கப்பட்ட மாபெரும் திட்டமாகும்.
இந்திரா காந்தி திட்டமிட்டபடி 100 சதவீத பங்குகளையும் அரசு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அரசு நிறுவனமாக Semiconductor Complex Limited என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு உற்பத்தி பணிகள் துவங்கியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செமிகண்டக்டர் சக்தி தெரியாமல் இருக்கும்போது இந்தியா முன்னோடியாக இந்தத் தொழிற்சாலையை அமைத்தது.
ஆனால் இந்திரா காந்தியின் மாபெரும் கனவு பிப்ரவரி 7 ஆம் தேதி 1989 ஆம் ஆண்டுத் தூள் தூளாய் உடைந்தது. பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி-யில் அமைக்கப்பட்டு இருந்த இந்தத் தொழிற்சாலையில் மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள், பல டன் அளவிலான மூலப்பொருள் எரிந்து நாசமானது.

இதனால் 1989 காலகட்டத்திலேயே சுமார் 60 முதல் 75 கோடி ரூபாய் வரையிலான இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது, இந்த விபத்து குறித்துப் புலனாய்வு அமைப்பு (IB) நேரில் சென்று பல கட்ட ஆய்வு, விசாரணையை நடத்தியும், தீ விபத்துக்கான காரணத்தை இன்று வரையில் கண்டறிய முடியவில்லை. இந்தத் தீவிபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு CISF அமைப்பு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்தத் தீ விபத்திற்குப் பின்பு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்பு 1997 ஆம் ஆண்டு Semiconductor Complex Limited இயங்க துவங்கியது. ஆனால் அரசு திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை, 2000ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டது. 2006ல் இந்த நிறுவனம் இந்திய விண்வெளி துறையின் Semiconductor Lab எனப் பெயரிடப்பட்டு R&D பிரிவாக இயங்கி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications