ஜகார்த்தா: வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் பொருட்டு இந்தோனேசியா அரசு கோல்டன் விசா என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி கோல்டன் விசாவை பெறக்கூடிய நபர்கள் நீண்ட காலம் இந்தோனேசியாவில் தங்கி தொழில் புரியலாம்.
இந்த புதிய கோல்டன் விசா திட்டம் என்பது இரண்டு வகைகளில் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கிறது. ஒன்று ஐந்தாண்டு கால விசா, மற்றொன்று பத்து ஆண்டு கால விசா. ஐந்து ஆண்டுகள் விசா பெறுவதற்கு தனி நபர் முதலீட்டாளர்கள் 2.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தை அங்கே நிறுவ வேண்டும். 10 ஆண்டுகளுக்கான விசாவை பெறக்கூடிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 5 மில்லியன் டாலர்கள் முதலீட்டு அளவு கொண்ட நிறுவனத்தை இந்தோனேசியாவில் நிறுவ வேண்டு.

இந்தோனேசியாவில் தங்களுடைய நிறுவனத்தை நிறுவ விரும்பாத தனி நபர்கள் 3.5 லட்சம் டாலர்களை முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் விசாவும், சுமார் 7 லட்சம் டாலர்களை முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் விசாவும் கிடைக்கும். இந்தோனேசியா அரசின் பத்திரங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
கார்ப்பரேட் முதலீட்டாளர்களுக்கும் கோல்டன் விசாவுக்கான தனித்தனி விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கனடா, பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இது போன்ற கோல்டன் விசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் கைவிடப்பட்டன. தற்போது அந்த முறையை இந்தோனேசியா அரசு கையில் எடுத்துள்ளது. இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடா நல்ல தரமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் பொருட்டு இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் வெளிநாட்டவர்கள் இந்தோனேசியாவில் வந்து தொழில் புரிவது மற்றும் முதலீடுகளை மேற்கொள்வது எளிதாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கோல்டன் விசாவிற்கான சோதனை ஓட்டம் கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விட்டது. இதுவரை இந்தோனேசியா அரசு சுமார் 300 பேருக்கு கோல்டன் விசாவினை வழங்கியுள்ளது. அதன் மூலம் 123 மில்லியன் டாலர்கள் முதலீடுகள் வந்துள்ளதாம்.
இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்ட ஆனால் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நபர்களுக்கு சிறப்பு திட்டங்களையும் அவர்கள் இந்தோனேசியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தர போவதாக இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் செயல்படுத்தப்படும் Overseas Citizenship of India (OCI) திட்டத்தை மாடலாக கொண்டு செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications