உலகின் மிகப்பெரிய பாமாயில் சப்ளையர் நாடான இந்தோனேஷியா-வில் இதன் உற்பத்தி குறைந்துள்ளதால் அந்நாட்டு மக்களுக்குப் போதுமான பாமாயில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏற்றுமதியை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன் படி உள்நாட்டில் விற்கப்படும் ஒவ்வொரு டன்னுக்கும் வெளிநாட்டிற்குக் குறைந்த அளவிலான ஏற்றுமதியை மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாட்டை ஜனவரி 1 முதல் பாமாயில் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாட்டை இந்தோனேஷியா அரசு விதிக்க உள்ளது.
இதன் மூலம் போதுமான உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என வெள்ளிக்கிழமையன்று இந்தோனேசிய நாட்டின் அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா
இந்தோனேஷிய நாட்டின் அரசு தற்போது விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளின் படி தனது உள்நாட்டு விற்பனை அளவில் 6 மடங்கு மட்டுமே உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இது ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், தற்போது 8 மடங்கு வரையில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கணக்கீடு
உதாரணமாக இந்தோனேஷியாவில் 100 லிட்டர் பாமாயில் விற்பனை செய்யப்பட்ட டிசம்பர் 31 வரையில் 800 லிட்டர் ஏற்றுமதி செய்யப்படலாம், ஆனால் ஜனவரி 1 முதல் 600 லிட்டர் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும் இதனால் சர்வதேச சந்தையில் பெரும் தட்டுப்பாடு உருவாகி சமையல் எண்ணெய் அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
உள்நாட்டு விநியோகம்
இந்தோனேஷிய மக்களுக்குப் போதுமான பாமாயில் விநியோகத்தில் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்தே இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு உள்ளது எனக் கடல் மற்றும் முதலீட்டு விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி செப்டியன் ஹரியோ செட்டியோ கூறினார்.
சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய் இருப்பு மற்றும் அவற்றின் விலை உள்ளிட்ட உள்நாட்டு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் அமைச்சர் செப்டியன் ஹரியோ செட்டியோ கூறினார்.
சமையல் எண்ணெய் விலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசியாவில் சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டிஸ் கொண்டு வர பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டது. இதில் முக்கியமான பாமாயில் பொருட்களின் மீதான ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்தது மறக்க முடியாது, அதன் மூலம் இந்தியாவில் சமையல் எண்ணெய் மீதான விலை உயர்வும் பெரும் பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது.
ரமலான் பண்டிகை
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட முஸ்லீம் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தோனேஷியா மார்ச் 2023 இல் ரமலான் பண்டிகையைக் கொண்டாட உள்ளது. இப்பண்டிகையின் போது அங்குச் சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் தேவை பொதுவாக உயரும், இதை உறுதிய செய்யவே பாமாயில் ஏற்றுமதியை ஜனவரி 1 முதலே குறைக்க உள்ளது.
இந்தியா
இந்தோனேஷியா-வின் இந்த முடிவு கட்டாயம் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையை அதிகரிக்கும், மேலும் இறக்குமதி பாமாயில் நம்பியிருக்கும் அனைத்து நிறுவனங்களும் இதன் மூலம் பாதிக்கும், தயாரிப்புகளின் விலையை அதிகரிக்கும்.
2023ல் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனக் கூறப்படும் நிலையில், சமையல் எண்ணெய் விலையில் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications