உலகம் போற்றும் எலான் மஸ்க் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார், டிவிட்டருக்கு போட்டியாக மெட்டா Threads அறிமுகம் செய்தது. இதின் மூலம் டிவிட்டரில் வாடிக்கையாளர்கள் மற்றும் விளம்பர வருமானம் இழக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
இதை தொடர்ந்து எலான் மஸ்க் சீனாவில் இருக்கும் wechat போல ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் X corp நிறுவனத்தை உருவாக்கி இதன் கீழ் டிவிட்டரை சேர்ந்து டிவிட்டரின் லோகோ, பெயர் அனைத்தையும் X ஆக மாற்றி டிவிட்டர் தளத்தை X தளமாக மாற்றினார். இதில் டிவிட்டரின் பிராண்ட் மதிப்பு காலியாகி தற்போது புதிய நிறுவனமான சந்தையில் அடியெடுத்து வைத்திகிறது.

இப்படி எலான் மஸ்க் 360 டிகிரியிலும் அடிவாங்கி வரும் வேளையில் டிவிட்டரின் புதிய X.com தளத்திற்கு இந்தோனேஷிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தோனேசிய அரசு அந்நாட்டில் புதிய சூதாட்டம் மற்றும் ஆபாச பட விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் x.com சில முக்கிய கன்டென்ட் விதிகளை மீறியுள்ள காரணத்தால் தற்போது தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தோனேசிய தகவல் அமைச்சகத்துடன் x.com தளத்தின் அதிகாரிகள் இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடத்தியும், பிரச்சனைகளை தீர்த்தும் வருகிறார்கள். இதற்கு மத்தியில் டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து x.com தனக்கு சொந்தமானது என்பதை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
இதன் மூலம் x.com இந்தோனேஷியாவில் கடுமையான பிரச்சனைகள் எதுவும் எதிர்கொள்ளவில்லை. இதனால் இந்த தற்காலிக தடைகள் அடுத்த சில நாட்களில் அல்லது அடுத்த சில வாரத்தில் நீக்கப்பட்டு எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் இயங்க துவங்கும்.
மேலும் டிவிட்டர் 17 வருடமாக உருவாக்கிய பிராண்ட் பெயர் தற்போது X என பெயர் மாற்றப்பட்டது மூலம் இதன் மதிப்பு 4 பில்லியன் டாலர் முதல் 20 பில்லியன் டாலர் வரையில் குறைந்திருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் X என பெயர் மாற்றப்பட்டு உள்ளது மூலம் பல நிதியியல் மற்றும் சட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளது.
சொல்லப்போனால் X என்ற பெயரை மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகியவை ஏற்கனவே சில முக்கிய சேவைக்காக அமெரிக்காவில் பிராண்ட்-ஐ பதிவு செய்துள்ளது. இதுவும் எலான் மஸ்க்-கிற்கு புதிய பிரச்சனையாக இருக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications