உலகின் மிகப்பெரிய சுற்றுலா நாடாக இருக்கும் இந்தோனேசியா தனது துருப்புச் சீட்டான பாலி (Bali) பயன்படுத்திப் பணக்கார வெளிநாட்டினரைத் தனது நாட்டிற்கு ஈர்க்கும் போட்டியில் நுழைந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரம் மேசமாக இருக்கும் நிலையில் சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் பல நாடுகள் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இருந்து மீண்டு வர பணக்கார வெளிநாட்டினரை ஈர்ப்பது மிகவும் முக்கியமான மற்றும் எளிய வழியாக உள்ளதால் இந்தோனேசியா புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இந்தோனேசியா
உலகளவில் பல நாடுகள் பணக்காரர்கள், டெக் வல்லுனர்கள், முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் எனப் பல தரப்பினரை முதலீட்டு செய்யவும், வர்த்தகத்தைத் துவங்கவும் உலக நாடுகள் அழைத்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி தொடர்ந்து பல நாடுகள் இருக்கும் நிலையில் தற்போது இந்தோனேசியாவும் களத்தில் இறங்கியுள்ளது.
இரண்டாம் வீடு விசா
இந்தோனேசியா புதிதாக இரண்டாம் வீடு அதாவது second home என்ற பெயரில் விசாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசாவை பெற விரும்புவோர் குறைந்தபட்சம் 2 பில்லியன் ரூப்பியா அல்லது 130,000 டாலர் அளவிலான தொகையைத் தங்கள் வங்கிக் கணக்குகளில் வைத்திருப்பவர்களுக்கு 5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு வீசா அளிக்கப்படுகிறது.
130,000 டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 1.06 கோடி ரூபாய்.
இந்தோனேசியா பொருளாதார வளர்ச்சி
இப்புதிய விசா கொள்கை கிறிஸ்துமஸ் அன்று அமலுக்கு வரும் என இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது. ரிசார்ட் தீவில் நடந்த இக்கொள்கை வெளியீட்டு விழாவின் போது, இந்தோனேசியா பொருளாதார வளர்ச்சி நேரடியாகப் பங்களிப்பை வழங்கும் குறிப்பிட்ட வெளிநாட்டினருக்கு இது பணம் அல்லாத ஊக்குவிப்புத் திட்டம் என்று அந்நாட்டின் குடியேற்றப் பிரிவின் செயல் இயக்குனர் ஜெனரல் Widodo Ekatjahjana கூறினார்.
கோஸ்டாரிகா மற்றும் மெக்சிகோ
தொழில் வல்லுநர்கள், ஓய்வு பெற்றவர்கள், பணக்காரர்களைக் கவர்ந்திழுக்கும் நீண்ட கால விசா வழங்கும் கோஸ்டாரிகா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளுடன் தற்போது இந்தோனேசியா-வும் இணைகிறது. பாலி-க்குச் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்திய இந்தோனேசியா 2021 ஆம் ஆண்டில் டிஜிட்டல் நாடோடி விசாவிற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தியது மறக்க முடியாது.
பாலி
கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தோனேசியா அரசு பாலி நகரத்தைச் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குப் படிப்படியாகக் கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி முதல் திறக்க தொடங்கியது. இந்த நிலையில் இந்தோனேசிய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் சில கட்டுப்பாடுகளை நீக்கியும், நீண்ட கால விசா திட்டத்தின் மூலம் வெளிநாட்டினரை அதிகளவில் தன் நாட்டின் சேர்ப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்புகிறது.
விசா ஆன் அரைவல்
இந்தோனேசிய அரசு கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டு இருந்த பெரும்பாலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி இந்தியா உட்பட 72 நாடுகளுக்கு மார்ச் 7, 2022 அன்று விசா ஆன் அரைவல் (VOA) திட்டத்தைச் செயல்படுத்தி வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் ஆசியா, ஐரோப்பாவில் இருக்கும் டெக் நிறுவனங்களை ஈர்க்க திட்டமிட்டுப் புதிதாக வர்த்தகம் துவங்கும் நிறுவனங்களுக்குப் பாஸ்ட் டிராக் பிஸ்னஸ் லைசென்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட காலம் குடியுரிமை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பிரிட்டன்
இதேபோல் பிரிட்டன் நாட்டில் Brexit-க்கு பின்பு நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க அந்நாட்டின் விசா சிஸ்டத்தில் முக்கியமான மாற்றத்தைச் செய்ய ஆய்வு செய்யப்பட்டு வருவதாக முன்னாள் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அறிவித்தார், தற்போது ஆட்சி மாற்றத்தின் காரணமாக இது தொடருமா என்ற சந்தேகம் எழுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications