மும்பை: தனியார் துறையை சேர்ந்த கடன் வழங்குனரான இந்தஸ்இந்த் வங்கியின் மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 190 சதவீதம் அதிகரித்து, 875.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 301.8 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.
இதற்கிடையில் இவ்வங்கியின் இயக்குனர்கள் குழு, ஒரு பங்குக்கு ஐந்து ரூபாய் டிவிடெண்டினை கொடுக்க ஒப்புதல் கொடுத்துள்ளது.

இவ்வங்கியின் வட்டி வருவாய் கடந்த ஆண்டினை காட்டிலும் 9.4 சதவீதம் அதிகரித்து, 3,534.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,231 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இதன் மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 2.67 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 1.74 சதவீதமாக இருந்தது. இதே நிகர வாராக்கடன் மதிப்பு 0.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 0.22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே கடந்த மார்ச் காலாண்டில் வரி செலவினமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இவ்வங்கியின் பங்கு விலை கடந்த வெள்ளிக்கிழமையன்று 0.43 சதவீதம் குறைந்து, 934.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications