நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான இண்டஸ் இண்ட் வங்கி, ரூ. 3 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் செப்டம்பர் 07, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. தற்போது, வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.99 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதபோல், மூத்த குடிமக்களுக்கு வங்கி 4.00 சதவீதம் முதல் 8.49 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. ஒரு வருடம் 4 மாதங்கள் முதல் ஒரு வருடம் 6 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புத் தொகையில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.99 சதவீத வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 8.49 சதவீத வட்டி விகிதத்தையும் வங்கி வழங்குகிறது. வழக்கமான வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு வங்கி 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு இண்டஸ்இண்ட் வங்கி வழங்கும் வட்டி விகிதங்களைப் பொருத்தவரையில்,வங்கி இப்போது 7 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதேபோல், 31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மேலும், வங்கி இப்போது 46 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 4.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அடுத்து 121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அத்துடன் 181 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.85 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், 211 நாட்கள் முதல் 269 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
270 நாட்கள் முதல் 354 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.35 சதவீத வட்டி விகிதத்தையும், 355 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 1 வருடம் முதல் 1 வருடம் 4 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தையும், 1 வருடம் 4 மாதங்கள் முதல் 1 வருடம் 6 மாதங்கள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு 7.99 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 1 வருடம் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 2 ஆண்டுகள் முதல் 61 மாதங்கள் வரையிலான நிரந்தர வைப்புத்தொகைகளுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதேபோல், 61 மாதங்கள் மற்றும் அதற்குப் பிறகு நிலையான வைப்புகளுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இறுதியாக, வங்கி தனது 5 வருட காலவரையறையுடன் கூடிய வரி சேமிப்பு நிலையான வைப்புகளுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications