IndusInd Bank: லாபத்தில் 72% உயர்வு.. ஆனாலும் பங்கு விலை 6% சரிவு.. புலம்பும் முதலீட்டாளர்கள்.. என்ன காரணம்?

இண்டஸ்இந்த வங்கி நேற்று வெளியிட்ட காலாண்டு முடிவில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 1037 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 72 சதவீதம் அதிகம் என்பதால் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் இண்டஸ்இந்த வங்கி பங்குகளின் அதிரடி வளர்ச்சியை பார்க்க ஆர்வமாக இருந்த முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இவ்வங்கி பங்குகள் சுமார் 6 சதவீதம் சரிந்து ஒரு பங்கு விலை 1,015.10 ரூபாயாக சரிந்துள்ளது. லாபத்தில் பெரும் உயர்வை பதிவு செய்த பின்பும் ஏன் சரிகிறது..? இதற்கு என்ன காரணம்..?

IndusInd Bank: லாபத்தில் 72% உயர்வு.. ஆனாலும் பங்கு விலை 6% சரிவு.. புலம்பும் முதலீட்டாளர்கள்.. என்ன காரணம்?

உண்மையில் சொல்ல வேண்டுமானால் இண்டஸ்இந்த வங்கி காலாண்டு முடிவுகளை முதலீட்டு சந்தையில் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. முதல் காலாண்டில் இவ்வங்கியின் லாபம் 72 சதவீதம் அதிகரிப்பது உண்மை, ஆனால் அது வர்த்தக நடைமுறை மூலம் ஒரு முறை கிடைக்கும் லாபத்தின் வாயிலாக பதிவாகியுள்ளது. இது ஒவ்வொரு காலாண்டுக்கும் கிடைக்காது.

இதோடு இக்காலாண்டில் வங்கியின் கடன் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது என்பது தான் உண்மை. இவ்வங்கியின் கடன் வர்த்தகத்தில் பதிவாகியுள்ள நெட் இன்டிரஸ்ட் மார்ஜின் காலாண்டு அடிப்படையில் 3.35 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே வருடாந்திர அடிப்படையில் கணக்கிடும் போது 3.46 சதவீதத்தில் இருந்து 3.57 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

NIM என்பது வங்கிகள் கடனுக்காக கொடுக்கும் பணத்திற்கு பெரும் வட்டி மற்றும் வைப்பு நிதிக்காக மக்களுக்கு கொடுக்கும் வட்டி வருமானத்திற்கு மத்தியிலான வித்தியாசம். NIM அளவுகள் குறைவது இண்டஸ்இந்த வங்கி லாபகரமான கடன்களை அதிகம் அளிக்கவில்லை என்பதை காட்டுகிறது.

இதன் எதிரொலியாக இண்டஸ்இந்த வங்கியில் நெட் இன்டிரஸ்ட் இன்கம் அளவுகள் சந்தை கணிப்பை காட்டிலும் 3 சதவீதம் குறைவாக உள்ளது. இண்டஸ்இந்த வங்கியின் நிர்வாகம் அடுத்த காலாண்டும் NIM அளவு அதிகளவில் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலை 2027ஆம் நிதியாண்டின் 2வது அரையாண்டில் மேம்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாகவே தற்போது இண்டஸ்இந்த வங்கி பங்குகள் சுமார் 6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. மேலும் இவ்வங்கியின் மொத்த வாராக் கடன் சொத்து மதிப்பு 3.25 சதவீகமாக உளல்து. மார்ச் 2026ல் 3.43 சதவீதமாக இருந்தது.

இண்டஸ்இந்த வங்கி குறித்த நுவாமா ஈக்விட்டீஸ் கூறுகையில் அதன் BUY கால்-ஐ தொடர்ந்து வைத்திருப்பது மட்டும் அல்லாமல் பங்குகளின் டார்கெட் விலையை 1250 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதேபோல் மோதிலால் ஆஸ்வால் நிறுவனமும் இண்டஸ்இந்த் வங்கியின் டார்கெட் விலை 1,125 ரூபாயாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+