இந்தியாவின் முக்கிய தனியார் வங்கிகளில் ஒன்றான இண்டஸ்இந்த் வங்கி-யை நிர்வாகம் செய்யும் இண்டஸ்இந்த் இண்டர்நேஷ்னல் ஹோல்டிங் நிறுவனம் (IIHL) மொரீஷியஸ், பஹாமாஸ் நாட்டில் செயல்படும் ஸ்டெர்லிங் வங்கியின் 100 சதவீத பங்குகளையும் மொத்தமாக வாங்கியுள்ளது என்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இண்டஸ்இந்த் வங்கி 1994ஆம் ஆண்டு ஹிந்துஜா குழுமத்தால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த முதலீடு, ஹிந்துஜா குழுமத்தின் உலகளாவிய நிதி சேவை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.

இண்டஸ்இந்த் சமீபத்தில் அக்கவுண்டிங் பிரச்சனையை எதிர்கொண்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும், இதில் இருந்து மீண்டு வரும் வேளையில் முக்கிய வெளிநாட்டு வங்கியை கைப்பற்றியுள்ளது, அதன் பங்கு முதலீட்டாளர்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.
IIHL நிறுவனத்திற்கு சொந்தமான துணை நிறுவனம் தான் IIHL மொரீஷியஸ், இந்த நிறுவனத்தின் வாயிலாகவே ஸ்டெர்லிங் வங்கி கைப்பற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஸ்டெர்லிங் வங்கி இனி 'IIHL பேங்க் மற்றும் டிரஸ்ட் நிறுவனம்' (IIHL Bank & Trust Limited) என்ற புதிய பெயரைப் பெற உள்ளது.
IIHL மொரீஷியஸ் 2022 செப்டம்பர் மாதத்தில் ஸ்டெர்லிங் வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது. இப்போது மீதமுள்ள பங்குகளைப் பெற்று முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. இது ஹிந்துஜா குழுமத்தின் தொடர் விரிவாக்க உத்தியின் பகுதியாகும் விளங்குகிறது.
ஹிந்துஜா குழுமம் நிதி, காப்பீடு மற்றும் முதலீடு துறைகளில் உலக அளவில் வலுவான வர்த்தகத்தை பெற வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் உள்ளது.
சமீபத்தில் கூட IIHL நிறுவனம் அனில் அம்பானிக்கு சொந்தமா ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தை பல வருட முயற்சிக்கு பின்பு 9650 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் முழு பங்குகளையும் கைப்பற்றும் போது அதன் துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் மற்றும் ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் காப்பீடு ஆகியவற்றையும் கைப்பற்றியது.
ஸ்டெர்லிங் வங்கியின் முழு உரிமை, IIHL-க்கு பஹாமாஸ் போன்ற offshore நிதி மையங்களில் புதிய சந்தை வாய்ப்புகளைத் உருவாக்கும். இதை பற்றி IIHL மொரீஷியஸ் தலைவர் அசோக் ஹிந்துஜா கூறுகையில், "இந்த கைப்பற்றல் IIHL-க்கு உலகளாவிய வளர்ச்சியை அதிகரிக்கும், சமீபத்திய முதலீடுகளுடன் இணைந்து, BFSI துறையில் 2030-ஆம் ஆண்டுக்குள் IIHL 50 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெறும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications