தென்னிந்திய மாநிலங்களில் GSDP அளவீட்டில் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாடு, 2023 ஆம் நிதியாண்டில் அதிகப்படியாக கடன் வாங்கினாலும் அதில் பெரும் பகுதி மூலதன விரிவாக்கத்திற்கு செலவிடப்பட்டு உள்ளதால் மாநிலத்தின் பொருளாதாரம் நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மற்றொரு மகுடமாக ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் சுமார் 2.5 மில்லியன் அதாவது 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக CMIE அமைப்பு தனது ஆய்வுகளின் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த 25 லட்சம் வேலைவாய்ப்புகளில் பெரும் பகுதி தொழிற்துறையில் தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. தொழிற்துறை வேலைவாய்ப்புகளில் 2022 மற்றும் 2023ல் மாபெரும் வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், அடுத்ததாக விவசாய துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இக்காலக்கட்டத்தில் சேவைத்துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இன்னும் கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்ட வேலைவாய்ப்பு எண்ணிக்கையை எட்டவில்லை எனவும் CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
CMIE அமைப்பின் தரவுகள் படி 2019ல் தமிழ்நாட்டில் 27 - 29 மில்லியன் வேலைவாய்ப்புகள் இருந்ததாகவும், லாக்டவுன் அறிவித்த 2020 மே - ஆகஸ்ட் மாதத்தில் 21. 8 மில்லியனாக குறைந்தது. கொரோனாவுக்கு பின்பு 2022 ஜனவரி - ஏப்ரல் காலக்கட்டத்தில் 24 மில்லியன், 2023 ஜனவரி - ஏப்ரல் மாதத்தில் 26 மில்லியனாக உயர்ந்துள்ளது என CMIE தரவுகள் கூறுகிறது.
ஜனவரி - ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு தரவுகள் படி தமிழ்நாட்டில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது தொழிற்துறையில் தான், மொத்த வேலைவாய்ப்புகளில் சுமார் 37 சதவீதம் தொழிற்துறையிலும், 35.3 சதவீதம் சேவை துறையிலும், 27.6 சதவீதம் விவசாய துறையிலும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் ஜனவரி - ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு தரவுகள் படி தமிழ்நாட்டில் அதிகப்படியாக புதிய வேலைவாய்ப்புகள் தொழிற்துறையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த வேலைவாய்ப்புகளில் சுமார் 41.8 சதவீதம் தொழிற்துறை வேலைவாய்ப்பு பங்கீடாக உள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டின் தொழிற்துறை மற்றும் உற்பத்தி துறையும் சேர்த்தல் வேலைவாய்ப்பு பங்கீடு 51.6 சதவீதத்தில் இருந்து 56.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications