சென்னை: தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தொழில் பூங்காக்களை அமைப்பதற்கான பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட இரண்டு தொழில் பூங்காக்களும் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் கவனம் செலுத்தும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. லெதர் அல்லாத காலணி உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என மாநில தொழில்துறை திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே பெரம்பலூரில் இத்தகைய தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டு அவை வெற்றிகரமாக செயல்படுகின்றன. இதனை முன்மாதிரியாக கொண்டு ஆலைகளை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது.
அண்மையில் தைவானை சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஆலைகளை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. எனவே தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் புதிதாக அமைய இருக்கும் தொழில் பூங்காக்கள் முழுக்க முழுக்க லெதர் அல்லாத காலணி உற்பத்தியில் கவனம் செலுத்தும் என தெரிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைய இருக்கும் தொழில் பூங்கா புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. எனவே இங்கே லெதர் அல்லாத காலணி உற்பத்தி ஆலைகளை நிறுவினால் இது மூன்று மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் என தமிழ்நாடு தொழில் துறை கருதுகிறது.
அதேவேளையில் திருவெரும்பூர் மற்றும் மணப்பாறையில் அமைய இருக்கும் சிப்காட் தொழில் பூங்காக்கள் பொறியியல் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துமாம். ஏற்கனவே ஜபில் என்ற ஒரு பன்னாட்டு நிறுவனம் திருச்சி மாவட்டத்தில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்களுடைய ஆலையை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ஆலை நிறுவப்படும் பட்சத்தில் இந்த பகுதியில் ஐந்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் பல்வேறு பொறியியல் நிறுவனங்கள் மணப்பாறை சிப்காட் தொழில் பூங்காவில் தங்களுடைய ஆலைகளை நிறுவுவதற்கு கேட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
ருச்சி மாவட்டத்தின் இரண்டாவது தொழில் பூங்கா திருவெரும்பூர் சிப்காட். இது கூடிய விரைவில் அமைக்கப்படும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமிக்கு அருகிலேயே அமைகிறது. இந்த தொழில் பூங்காவிற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தீவிர படுத்தியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதே போல திருவாரூர் மாவட்டத்தில் ஒரு உணவு பூங்காவும் கரூர் மாவட்டத்தில் ஒரு டெக்ஸ்டைல் பூங்காவும் நிறுவுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் தொழில் பூங்காக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே குவிந்திருக்காமல் பரவலாக்கப்பட்டால் அது மாநிலம் முழுவதும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications