அமெரிக்காவின் உயரிய உளவு அமைப்பான FBI-யின் இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் பட்டேல் பதவி ஏற்றுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப பதவியேற்ற பிறகு தன்னுடைய நிர்வாகத்தில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு முக்கிய பதவிகளை அளித்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவின் உளவு அமைப்பான FBI-யின் இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேலை நியமனம் செய்தார். காஷ் படேல் வலிமையானவர் என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் டிரம்ப் கூறி இருக்கிறார்.

பிப்ரவரி 21 ஆம் தேதி காஷ் படேல் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக FBI உளவு அமைப்பின் இயக்குனராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் பகவத் கீதையின் மீது சத்தியம் செய்து பதவியேற்றார். காஷ் படேலை பொறுத்தவரை பத்தாண்டு காலத்திற்கு FBI இயக்குநராக பதவியில் இருப்பார் என சொல்லப்படுகிறது.
காஷ் படேலின் பெற்றோர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர் நியூயார்க் கார்டன் சிட்டியில் 1980இல் பிறந்தவர். ரிச்மான்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பு முடித்து பின்னர் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். வழக்கறிஞராக தனது பணியை தொடங்கிய இவர் அமெரிக்க அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து வந்துள்ளார். இதனிடையே FBI இயக்குனராக பதவி ஏற்ற காஷ் படேலுக்கு வாழ்த்து கூறி மகேந்திரா & மகேந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
காஷ் படேல் FBIஇன் புதிய இயக்குனர் , இவருடன் யாராலும் மோத முடியாது என்பது போல தெரிகிறது என ஆனந்த் மகேந்திரா தன்னுடைய பதிவில் கூறியிருந்தார். காஷ் படேலின் புகைப்படத்தையும் அதில் வெளியிட்டு இருந்தார். ஆனந்த மகேந்திராவின் இந்த எக்ஸ் தள பதிவு லட்சக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்த பதிவினை லைக்
ஒரு பயனர் ஹாலிவுட் கிளாசிக் படத்தில் வருவதை போல காஷ் படேலின் இந்த புகைப்படம் இருக்கிறது என கூறியுள்ளார். ஒரு பயனர் கண்டிப்பாக காஷ் படேல் வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறார் என கூறியுள்ளார். கம்பீரமாக இருக்கிறார், சிறப்பாக செயல்படுவார் என பலரும் கூறியுள்ளனர்.
காஷ் படேலின் தோரணையை பார்க்கும் போது இவருக்கு நீங்கள் ஏன் தார் காரினை பரிசளிக்க கூடாது என ஒரு பயனர் ஆனந்த் மகேந்திராவிடம் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஆனந்த் மகேந்திரா கண்டிப்பாக தார் காரை பயன்படுத்துவதற்கு பொருத்தமான நபராக தான் இவர் இருப்பார் என கூறியிருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications