ரூ. 50 லட்சம் வீட்டை வாங்க அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வளவு செலவாகும்? பணவீக்கத்தின் தாக்கத்தை பாருங்க!

பணவீக்கம் என்பது இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான விஷயம். பணத்திற்கு வாங்கும் சக்தி குறைந்து பணத்தின் மதிப்பு குறைவதைத் தான் பணவீக்கம் என்கிறோம். பணவீக்கம் பொதுவாக ஆண்டுக்கு 6 சதவீதமாக இருக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை 6 சதவீதம் அதிகரிக்கும் என்பதே இதன் அர்த்தம். இப்படி இருக்கையில் நாம் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் ,கட்டி வைத்த வீடு போன்றவற்றிலும் எதிர்காலத்தில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த பதிவில் ஒரு வீட்டை 50 லட்சம் ரூபாய் செலவில் இன்று வாங்குகிறீர்கள் என்றால்.. அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வளவு செலவு செய்து அந்த வீட்டை வாங்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

பணவீக்கம் என்றால் என்ன?: பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை காலப்போக்கில் அதிகரிப்பதை அளவிடும் ஒரு விகிதமாகும். அதாவது உங்கள் பணத்தின் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் குறைந்து போவதை இது குறிக்கிறது. உதாரணமாக 5 வருடங்களுக்கு முன்பு நீங்கள் வாங்கிய மளிகை பொருட்களின் விலையும், தற்போது நீங்கள் வாங்கும் மளிகை பொருட்களின் விலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசம் உங்களுக்கே புரியும். பணவிக்க விகிதம் அதிகரித்திருப்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

 ரூ. 50 லட்சம் வீட்டை வாங்க அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வளவு செலவாகும்? பணவீக்கத்தின் தாக்கத்தை பாருங்க!

6 சதவீத பணவீக்கத்தின் தாக்கம்: இன்று நீங்கள் ஒரு சொத்தையோ அல்லது சொகுசு காரையோ ரூ.50 லட்சம் மதிப்பில் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பணவீக்க விகிதம் 6 சதவீதத்தில் நிலையாக இருந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் அதே பொருளை வாங்க உங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 90 லட்சம் வரை தேவைப்படும். இன்று ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஒரு விஷயத்திற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 90 லட்சம் தேவைப்படுவது பணவீக்கத்தின் தாக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பணவீக்க கால்குலேட்டரை வைத்து ரூ.50 லட்சத்தின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் என்னவாக இருக்கும் என்பதை பாப்போம்.

50 லட்சத்திற்கான பணவீக்கக் கணக்கீடு:

0 ஆண்டுகள்: ரூ. 50,00,000
1 ஆண்டுகள்: ரூ. 53,00,000
2 ஆண்டுகள்: ரூ. 56,18,000
3 ஆண்டுகள்: ரூ. 59,55,080
4 ஆண்டுகள்: ரூ. 63,12,385
5 ஆண்டுகள்: ரூ. 66,91,128
6 ஆண்டுகள்: ரூ. 70,92,596
7 ஆண்டுகள்: ரூ. 75,18,151
8 ஆண்டுகள்: ரூ. 79,69,240
9 ஆண்டுகள்: ரூ. 84,47,394
10 ஆண்டுகள்: ரூ. 89,54,238

10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 50 லட்சம் என்பது ரூ. 89.54 லட்சமாக மாறும். அதாவது இது கிட்டத்தட்ட 2 மடங்கு என்று சொல்லலாம்.

வீடு வாங்குதல்: ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் பணவீக்கம் ஆண்டிற்கு 6 சதவீதம் உயர்ந்து கொண்டே இருந்தால் இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே வீட்டை வாங்க ரூ. 90 லட்சம் செலவாகும். நீங்கள் வீடு வாங்குவதை தாமதப்படுத்தினால் எதிர்கால விளைவுகளை சமாளிக்க ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்க வேண்டி வரும்.

கல்வி செலவுகள்: பணவீக்கம் கல்விச் செலவுகள் உட்பட அனைத்தையும் பாதிக்கிறது. இன்று இந்தியாவில் உள்ள ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு சுமார் 20 லட்ச ரூபாய் வரை செலவாகிறது. 6 சதவீத பணவீக்க அதிகரிப்பு கல்வி செலவுகளையும் விட்டு வைக்கவில்லை. 10 ஆண்டுகள் கழித்து இதே படிப்புக்கு ரூ. 36 லட்சம் செலவாகலாம். எனவே இன்னும் 10 ஆண்டுகளில் உங்களுடைய பிள்ளைகளை பல்கலைக்கழகங்களில் சேர்க்க இருக்கும் பெற்றோர்கள் அதற்கு தகுந்தார் போல் சேமிக்க வேண்டும்.

முன்கூட்டியே திட்டமிடுதல், புத்திசாலித்தனமாக முதலீடு செய்தல், கூட்டு வட்டியின் மூலம் பலன் பெறுதல் போன்ற பண வீக்கத்தை தடுக்கும் முதலீடுகள் குறித்து பரிசீலிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+