பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கையில் உள்ள பணத்தின் மதிப்பு குறைகிறது. உதாரணமாக இன்று 500 ரூபாய் நோட்டை வைத்து நீங்கள் வாங்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இன்னும் குறைவாக இருக்கும். பொதுவாக உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரித்து உங்கள் பணத்தின் வாங்கும் திறன் குறைவதே பணவீக்கம் என்று கூறப்படுகிறது. மிதமான பணவீக்கம் பொருளாதாரத்திற்கு நல்லது. ஆனால் வேகமாக இருந்தால் அது ஒரு கவலைக்குரிய விஷயமாக மாறலாம்.
பணவீக்கம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட அளவு பணம் எவ்வளவு மதிப்புடையதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒரு ஃபார்முலாவை பயன்படுத்தலாம்.

FV (எதிர்கால மதிப்பு) = PV (தற்போதைய மதிப்பு) x (1 + r (ஆண்டு பணவீக்க விகிதம்))^n
இந்தியாவில் தற்போதைய பணவீக்க விகிதம் 4.31 சதவீதமாக உள்ளது. எனவே அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
FV = ரூ. 1,00,00,000 x (1 + 0.0431)^5
FV = 1,00,00,000 x 1.2347
FV = 1,23,47,000
பணவீக்கத்தால் இழந்த மதிப்பு:
1,23,47,000 - 1,00,00,000 = ரூ. 23,47,000
எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 1 கோடியின் மதிப்பு சுமார் ரூ. 76.53 லட்சமாக மட்டுமே இருக்கும். சரியான பணவீக்க விகிதத்தை தெரிந்துகொள்ள பணவீக்க கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். மேலும் இதற்கு எதிராக முதலீடு செய்து வைப்பதும் உதவிகரமானதாக இருக்கும்.
முதலீடு ஏன் முக்கியம்?: பணவீக்கத்திற்கு எதிராக உங்களை செயல்பட வைக்க முதலீடு தேவை. அதற்கு ஏற்ப மாதம் மாதம் ஒரு சிறு தொகையை முதலீடு செய்யலாம். இன்றெல்லாம் இளைஞர்கள், வேலைக்கு செல்பவர்கள் எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வோடு செயல்படுகின்றனர். அப்படி செயல்படும்போது பணவீக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு திட்டமிடுவது முக்கியம்.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.23 லட்சம் குறைவாக இருக்கும் என்று பார்முலாவை வைத்து தெரிந்து கொண்டோம். அப்படியானால் பொருட்கள் மற்றும் நீங்கள் பெரும் சேவைகளின் விலையும் அதிகரிக்க உள்ளது. எனவே அதற்கு ஏற்ப திட்டமிடுங்கள்.


Click it and Unblock the Notifications