இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் 5.59 சதவீதமாக இருக்கும் போதே விலைவாசி உச்சத்தில் இருக்கிறது, விலைவாசி உயர்வால் மக்கள் தற்போது வீட்டுக்குத் தேவையான உணவு பொருட்களைக் கூட வாங்குவதற்குத் தயங்கியும், வாங்கும் அளவுகளைக் குறைத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் துருக்கி நாட்டில் பணவீக்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 வருட உயர்வை எட்டியுள்ளது.
துருக்கி பணவீக்கம்
துருக்கி நாட்டின் வருடாந்திர பணவீக்க அளவீடுகள் வெளியாகியுள்ளது. இளம் தலைமுறையினர் தற்போது சுற்றுலா செல்ல அதிகம் விரும்பும் பகுதியாக மாறியுள்ள துருக்கியில் பணவீக்கம் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டு மக்கள் அடிப்படைத் தேவையான உணவு பொருட்களைக் கூட வாங்க முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
துருக்கி புள்ளியியல் அமைப்பு
துருக்கி புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஜனவரி மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு டிசம்பர் மாதத்தை விட 11% அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் உணவுப் பொருட்களின் விலைகள் வருடாந்திர அடிப்படையில் சுமார் 55 சதவீதம் அதிகரித்துள்ளது.
49 சதவீதம்
துருக்கி நாட்டில் 2002 ஆம் ஆண்டுக்கு பின்பு இத்தகைய மோசமான வகையில் பணவீக்கம் 49 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. துருக்கி அரசு அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட வட்டி குறைப்பு மூலம் ஏற்பட்ட பொருளாதார எழுச்சி மற்றும் நாணய நெருக்கடி தற்போது பணவீக்கத்தை அதிகரித்துள்ளது.
ரெசெப் தயிப் எர்டோகன்
அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், அதிக வட்டி விகிதங்களின் "எதிரி" என்று தன்னை அறிவித்துக் கொண்டு உள்ளார். துருக்கியின் மத்திய வங்கி, ஜனவரியில் வட்டி குறைப்பை நிறுத்துவதற்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் இருந்து 5 சதவீதம் வட்டியைக் குறைத்து 14 சதவீதமாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications