இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதமானது கடந்த மார்ச் மாதத்தில் 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.95 சதவீதமாக உச்சம் தொட்டுள்ளது.
இது உணவு பொருட்கள் விலையானது கணிசமாக அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுகின்றது.
இதே நுகர்வோர் விலைக் குறியீடானது (CPI) பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவு பணவீக்கம்
இதில் உணவு பணவீக்கம் 7.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.85 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து மூன்றாவது மாதமாக ரிசர்வ் வங்கியின்(RBI) இலக்கிற்கு மேலாக இருந்து வருகின்றது. மொத்தத்தில் உணவு பொருட்களின் விலை பணவீக்கத்தில் கிட்டதட்ட பாதியாக உள்ளது.
பணவீக்க உச்சம்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் விநியோக சங்கிலி பிரச்சனைகள் இருந்து வருகின்றது. இது உலகளாவிய அளவில் சமையல் எண்ணெய் சப்ளையானது, தானிய விலையேற்றம், உர ஏற்றுமதியையும் சீர்குலைத்துள்ளது. இது பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
எண்ணெய் விலை உச்சம்
இதே பாமாயில், பாமலின் எண்ணெய் இந்த ஆண்டு கிட்டதட்ட 50% அதிகரித்துள்ளது. இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பணவீக்கத்தினால் மிக மோசமான பாதிப்பினைக் கண்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தனர். தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் பணவீக்கம் மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை
இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தினை ஆதரிப்பதை விட, பணவீக்கத்தினை சமாளிக்கவும் வட்டி விகிதத்தினை உயர்த்தாமல் அப்படியே வைத்துள்ளது.
மார்ச் 2022ல் சிபிஐ பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், 10 ஆண்டு G- Sec மகசூல் 7.2 சதவீதத்தினை தாண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications