ஒரு பொருளையோ அல்லது தயாரிப்பையோ வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நிறுவனங்கள் பிரபலங்கள், சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள் ஆகியோர் மூலம் விளம்பரம் செய்கின்றன. ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு பிரபலங்கள் குறிப்பிட்ட தயாரிப்பை பயன்படுத்தும் படி எடுத்துரைக்கின்றனர்.
இவ்வாறு ஒரு பொருளையோ அல்லது தயாரிப்பையோ விளம்பரம் செய்யும் போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

விளம்பரங்களில் உண்மையான தகவல்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அதனை விளம்பரம் செய்யும் நபர்களுக்கும் இருக்கிறது என உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுத்தீன் அமானுல்லா அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் வழக்கை விசாரித்த போது விளம்பரங்கள் தொடர்பாகவும் , அதில் பங்கேற்கும் பிரபலங்கள் தொடர்பாகவும் பல கருத்துகளை முன் வைத்தது.
பிரபலங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்கள், ஆகியோர் ஒரு பொருளை அங்கீகரித்து விளம்பரம் செய்யும் போது அது மக்களிடம் நேரடியாக சென்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த தாக்கத்தை உணர்ந்து செயல்படும் என்ற அறிவுறுத்தலை நீதிபதிகள் முன் வைத்துள்ளனர்.
ஒரு பொய்யான தகவல் மக்களை சென்று சேர்ந்துவிட்டால் அந்த நிறுவனம் , விளம்பரதாரர் மட்டுமல்ல அதை எடுத்துரைத்த பிரபலத்திற்கும் அதில் பங்கு உள்ளது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்களில் இடம்பெறும் தயாரிப்பு தரமற்றதாகவோ, ஏமாற்றுவதாகவோ கண்டறியப்பட்டால் அதில் நடித்தவர்களும் அக்குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
வழக்கமாக விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு முன்பு, விளம்பரதாரர்கள் கேபிள் டிவி விதிகள் மற்றும் விளம்பர கொள்கைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் சுய அறிவிப்பு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதே போல தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு முன்பு இந்த அறிவிப்புகளை பிராட்காஸ்ட் சேவா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் பிரபலங்கள் மூலம் ஒரு பொருளை விளம்பரம் செய்வது கோடிக்கணக்கான மக்களை சென்றடைகிறது. ஒருவேளை அந்த விளம்பரத்தில் தவறான தகவல் இடம்பெற்றால் அதுவும் கோடிக்கணக்கான மக்களை சென்றடைகிறது. இது தொடர்பாகவே உச்சநீதிமன்றம் தனது கவலையை எழுப்பியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications