இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் முதலீடு இல்லாமல் பலர் தவித்து வரும் வேளையில், ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனர் முதலீட்டாளர் அதுவும் இந்திய முதலீட்டாளர் கொடுத்த 288 கோடி ரூபாய் முதலீட்டை மொத்தமாக செலவு செய்துவிட்டு, செலவுக்கு கணக்கு கேட்டால் பதில் அளிக்காமல் முதலீட்டாளரை அலையவிட்டு வருகிறார்.
இந்திய ஸ்டார்ட்அப் சந்தை மொத்தமும் இந்த சம்பவத்தை பற்றி தான் பேசி வருகிறது. யார் இந்த ராகுல் யாதவ்..? 288 கோடி ரூபாயை முதலீடு செய்துவிட்டு தற்போது புலம்பும் நிறுவனம் எது..? இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் இன்னும் பாரத்பே அஷ்னீர் க்ரோவர் பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் தற்போது புதிய கதையாக ராகுல் யாதவ் சிக்கியுள்ளார்.

இந்தியாவில் பிரபலமான ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான Housing.com உருவாக்கி பெரும் மாற்றத்தை செய்த இந்நிறுவன நிறுவனர்களில் ஒருவர் தான் ராகுல் யாதவ். Housing.com நிறுவனத்தில் இருந்து பல்வேறு பிரச்சனைக்கு பின்பு வெளியேற்றப்பட்ட ராகுல் யாதவ் பல வருடங்களுக்கு பின்பு இதே ரியல் எஸ்டேட் துறையில் உருவாக்கிய நிறுவனம் தான் 4B Networks.
இந்த 4B Networks நிறுவனத்தில் இந்தியாவில் பிரபலமான முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான Infoedge நிறுவனத்தின் கிளை நிறுவனமான Allcheckdeals India நிறுவனம் 276 கோடி ரூபாய் பங்குகளாகவும், 12 கோடி ரூபாயை கடன் என மொத்தம் 288 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.
இந்த நிலையில் 4B Networks நிறுவனத்தில் Allcheckdeals முதலீடு செய்த 288 கோடி ரூபாய்க்கு எவ்விதமான வர்த்தக முன்னேற்றமும் இல்லாத நிலையில், தொடர்ந்து முதலீட்டாளர் ராகுல் யாதவ்-யிடம் வர்த்தகம் மற்றும் நிதி பரிமாற்ற கணக்குகளை காட்டுமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ராகுல் யாதவ் எவ்விதமான ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
இதை தொடர்ந்து Allcheckdeals முதலீடு செய்த 288 கோடி ரூபாய் முதலீட்டை wrote off செய்யப்பட்டதாக அறிவித்து, பணத்தை ராகுல் யாதவ் என்ன செய்தார் என்பதை ஆய்வு செய்ய Deloitte Touche Tohmatsu India LLP நியமித்து forensic audit செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications